4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுடன் பாடுகிறாரா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்?

ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவிருக்கும் 2.0 படத்துக்கு இசையமைத்துள்ளார். 

News image
Updated On :20 டிசம்பர் 2017, 6:40 am

DIN

ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவிருக்கும் 2.0 படத்துக்கு இசையமைத்துள்ளார். 

Story image

ரஜினிகாந்த் முதன்முதலில் இசைஞானி இளையராஜாவின் இசையமைப்பில் வெளிவந்த, 'மன்னன்' திரைப்படத்தில் 'அடிக்குது குளிரு' என்ற பாடலை பாடினார். அதன்பின் பல ஆண்டுகள் கழித்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த 'கோச்சைடையான்' படத்தில் ஒரு பாடலை பாடினார். ஒரு இசை நிகழ்ச்சிக்காக ரஜினியை மீண்டும் ஏ.ஆர்.ரஹ்மான் பாட வைக்கவுள்ளதாக தகவல் வெளியானது.

Story image

ஏ.ஆர்.ரஹ்மான், தனது இசைப் பயணத்தை தொடங்ககி 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதற்காக இந்த நிகழ்ச்சியா என்று ஏ.ஆர்.ரஹ்மானிடம் கேட்கப்பட்ட போது அவர் தில்லியில் பாராட்டு விழா ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளனர். டிசம்பர் 23-ம் தேதி அன்று தில்லி இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் பிரமாண்டமான அரங்கில் நடைபெறம் என்ற தகவல் உண்மைதான். ஆனால் அந்நிகழ்ச்சி நாடக மேதை ஒய்.ஜி.பார்த்தசாரதி அவர்களின் 100-வது பிறந்த தினத்தை சிறப்பிக்க, அவரது பேத்தியும் நடிகர் ஒய்.ஜி.மகேந்திராவின் மகளுமான மதுவந்தி அருண் ஒருங்கிணைக்கும் இசை நிகழ்ச்சி அது என்று கூறினார்.

Story image

இந்த விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொள்கிறார் ஆனால் அந்நிகழ்ச்சியில் ஏ.ஆர். ரஹ்மானுடனுடன் இணைந்து ஒரு பாடலையும் பாடவிருக்கிறாரா என்பது இன்னும் உறுதியாகவில்லை என்றனர் இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.