சமீபத்தில் வெளியான அருவி படத்தை ரஜினி பாராட்டியுள்ளார்.
'ஜோக்கர்', 'தீரன் அதிகாரம் ஒன்று' போன்ற படங்களைத் தயாரித்த எஸ்.ஆர்.பிரபுவின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'அருவி'. அருண் பிரபு இயக்கியுள்ள இந்தப் படத்தில் அதிதி பாலன், அஞ்சலி வரதன் போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - பிந்து மாலினி & வேதாந்த் பரத்வாஜ். படவிழாக்களில் திரையிடப்பட்டு வரவேற்பைப் பெற்ற படம் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களின் பலத்த பாராட்டைப் பெற்றுள்ளது.
தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த பலரும் அருவி படத்தை வெகுவாகப் பாராட்டியுள்ளார். பிரபல இயக்குநர் ஷங்கர், அருவி படத்தைப் பாராட்டி ட்வீட் வெளியிட்டார். இந்நிலையில் அருவி படத்தைப் பார்த்த ரஜினி, இயக்குநர் அருண் பிரபுவை அழைத்துப் பாராட்டியுள்ளார். இத்தகவலை அருண் பிரபு ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
உச்சம் தொடும் அன்பின் கொடி. ஆம். ஒரு தொலைப்பேசி அழைப்பு. ரஜினிகாந்த் அவர்களிடமிருந்து. மகிழ்ச்சி. மகிழ்ச்சி. மகிழ்ச்சியோ மகிழ்ச்சி என்று ட்வீட் வெளியிட்டு தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார் அருண் பிரபு. இந்தப் படத்தைப் பார்த்து அழுதேன், சிரித்தேன், பல விஷயங்களையும் யோசிக்கவைத்துவிட்டது. அருவி படம் பற்றி இன்னும் பல ஆண்டுகள் கழித்தும் பேசுவார்கள் என்று ரஜினி கூறியதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து ட்வீட் செய்த படநாயகி அதிதி பாலன், அருவி படக்குழுவினரை ரஜினி அழைத்துப் பாராட்டும்போது என்னால் மகிழ்ச்சியை அடக்கமுடியவில்லை. மகிழ்ச்சி என்று ட்வீட் செய்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


