நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் சர்ச்சை, எகிப்திய படத் தழுவல் குறித்து அருவி பட இயக்குநர் விளக்கம்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியைக் கிண்டல் அடித்தும் விமரிசனங்கள் செய்தும்...
நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் சர்ச்சை, எகிப்திய படத் தழுவல் குறித்து அருவி பட இயக்குநர் விளக்கம்!

அருவி படம் அஸ்மா என்கிற எகிப்திய படத்தைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு அப்படத்தின் இயக்குநர் அருண் பிரபு விளக்கம் அளித்துள்ளார்.

'ஜோக்கர்', 'தீரன் அதிகாரம் ஒன்று' போன்ற படங்களைத் தயாரித்த எஸ்.ஆர்.பிரபுவின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'அருவி'. அருண் பிரபு இயக்கியுள்ள இந்தப் படத்தில் அதிதி பாலன், அஞ்சலி வரதன் போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - பிந்து மாலினி & வேதாந்த் பரத்வாஜ். படவிழாக்களில் திரையிடப்பட்டு வரவேற்பைப் பெற்ற படம் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களின் பலத்த பாராட்டைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் அருவி படம் எகிப்திய படத்தின் தழுவல் என்றொரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் அருவி படம் எகிப்திய படத்தின் தழுவல் என்றொரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அஸ்மா படத்தில் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெண் தொலைக்காட்சி நிகழ்ச்சி வழியாக தன்னுடைய நோய் குறித்து வெளியுலகுக்குச் சொல்கிறாள். அருவி படத்திலும் அதேபோன்று தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலமாகவே கதாநாயகி தன்னுடைய நோய் குறித்த விவரங்களை வெளியிடுகிறாள். இதனால் அஸ்மா படத்தின் மையமும் அருவி படத்தின் மையமும் ஒன்றாக இருப்பதால் அஸ்மா படத்தை காப்பியடித்து இயக்குநர் அருண் பிரபு, அருவி படத்தை உருவாக்கியுள்ளதாக விமரிசனங்கள் எழுந்துள்ளன.

இந்தப் படத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியைக் கிண்டல் அடித்தும் விமரிசனங்கள் செய்தும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் ட்விட்டரில் தனது வருத்தத்தையும் கோபத்தையும் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார் அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்.

இந்த இரு சர்ச்சைகள் குறித்தும் இயக்குநர் அருண் பிரபு ஒரு பேட்டியில் கூறியதாவது:

இந்தக் கதையை 2013-ல் எழுதினேன். அப்போதுதான் ரியாலிட்டி ஷோக்கள் புகழ்பெற ஆரம்பித்தன. தொடர்களை விரும்பிப் பார்ப்பவர்கள் அதுமாதிரியான நிகழ்ச்சிகளையும் பார்க்க ஆரம்பித்தார்கள். ஷாங்கையிலும் அதுபோன்ற ஒரு நிகழ்ச்சி உள்ளது. அதனால்தான் அங்கும் படத்துக்கு அதிக வரவேற்பு அளித்தார்கள். 

சிறுவயது முதல் தொலைக்காட்சித் துறையில் பணிபுரிந்துவருகிறேன். ஊடகங்களில் பணிபுரிபவர்கள் பலரும் என் நண்பர்களாக உள்ளார்கள். தொலைக்காட்சித் துறைக்குள் நுழையும்போது அதன் தேவைகள் வேறாக உள்ளதை அறியமுடிந்தது. டிஆர்பி இலக்குகளை நோக்கி நிகழ்ச்சிகளை அமைக்கவேண்டும். முதல் பத்து நிமிடங்களில் சுவாரசியமாக ஏதாவது செய்தாகவேண்டும். இத்துறையில் நாங்கள் பணிபுரிந்தபோது பலமுறை மனித உணர்வுகள் பாதிக்கப்படுவதை அறியமுடிந்தது. அது படத்தில் எதிரொலிக்கவேண்டும் என எண்ணினேன். மற்றபடி எந்த ஒரு தனிப்பட்ட மனிதரையும் நிகழ்ச்சியையும் தாக்கவேண்டும் என்பது எங்கள் இலக்கல்ல. 

அஸ்மா என்கிற எகிப்தியப் படத்தை காப்பி அடித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான ட்வீட்கள் வெளியானபிறகுதான் அந்தப் படத்தை நான் பார்த்தேன். திரைமொழியை ஓரளவு அறிந்தவர்கள் இந்த இரு படங்களையும் பார்த்தால் அது காப்பி அடிக்கப்பட்டுள்ளதா என்பதை அறியலாம். இரு படங்களையும் பார்த்துவிட்டு முடிவெடுங்கள் என்று விளக்கம் அளித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com