

விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு வடிவத்தில் சமந்தாவும் நாக சைதன்யாவும் ஜோடியாக நடித்தார்கள். அதிலிருந்து இருவரும் நண்பர்களாகி பிறகு காதலர்களாகவும் மாறியுள்ளார்கள்.
இந்நிலையில் இருவருக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இந்நிலையில் நாக சைதன்யாவின் தந்தையும் நடிகருமான நாகார்ஜூனா நடிக்கும் Raju Gari Gadhi 2 படத்தில் நடிக்க சமந்தா ஒப்பந்தமாகியுள்ளார். விரைவில் திருமணம் நடக்கவுள்ளதால் படங்களைக் குறைத்துக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புதிய படம் ஒன்றில் நடிக்க முன்வந்துள்ளார் சமந்தா. 2015-ல் வெளிவந்த Raju Gari Gadhi-யின் இரண்டாம் பாகம் இப்படமாகும்.
இதுபற்றி படக்குழுவினர் கூறும்போது: நிச்சயதார்த்த நிகழ்வுக்குப் பிறகு சமந்தா ஒப்புக்கொண்ட முதல் படம் இது. நிச்சயதார்த்தத்துக்குப் பிறகும் சமந்தாவுக்கு வாய்ப்புகள் குறையவில்லை. முன்பை விடவும் அவர் இப்போது இன்னும் அதிகப் படங்களில் நடிக்க ஆர்வமாக உள்ளார். காரணம், தற்போது நாக சைதன்யா, நாகார்ஜூனா உள்ளிட்ட அனைத்து குடும்ப உறுப்பினர்களும் சமந்தா தொடர்ந்து நடிக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள். இனி படங்களில் நடிக்காமல் போக எந்த ஒரு காரணமும் கிடையாது என்று கூறியுள்ளார்கள்.
Raju Gari Gadhi 2 படத்தில் நாகார்ஜூனா, சமந்தாவுடன் சீரத் கபூர், வெனீலா கிஷோர், சகலகலா சங்கர் ஆகியோரும் நடிக்கவுள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.