சென்னை: நடிகர் விஜயின் 61-ஆவது படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடிக்கிறார் என்று சொல்லப்பட்ட நடிகை ஜோதிகா தற்பொழுது அந்த படத்திலிருந்து விளக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அதே நேரத்தில் அவருக்குப் பதிலாக நடிகை நித்யா மேனன் ஒப்பந்தமாகியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
நடிகை ஜோதிகா தனது திருமணத்துக்கு பிறகு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கணவர் நடிகர் சூர்யாவின் குடும்ப சம்மதத்துடன் மீண்டும் '36 வயதினிலே' படத்தின் மூலம் ரீ எண்ட்ரி ஆனார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் மட்டுமே நடிக்கலாம் எனவும், வெளியார் படங்களில் நடிப்பதில்லை என்பதையம் கொள்கையாக வைத்திருந்தார்.
இந்த சூழ்நிலையில் 'பைரவா' படத்தைத்த தொடர்ந்து நடிகர் விஜய் நடிக்கஉள்ள படத்தில் மட்டும் நடிக்கலாம் என ஜோதிகா திட்டமிட்டு இருந்தார். படத்தின் பிளாஷ் பேக் பகுதியில் மட்டுமே வரும் கதாபாத்திரத்தில், நடிப்புக்கு முக்கியத்துவம் தரும் வகையில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகின.
ஆனால் தற்போது விஜயுடன் சேர்ந்து நடித்தால் பின்னர் மற்ற கதாநாயகர்களும் அணுகுவார்கள் எனவே 'மகளிர் மட்டும்' போன்ற கதாநாயகர் இல்லாத படங்களில் மட்டும் நடித்து விட்டுப் போய் விடலாம் என்று அவரது கணவர் குடும்பத்தில் இருந்து அறிவுரைகளை வந்ததாகத் தெரிகிறது. இதனால் நடிகை ஜோதிகா படத்தில் பங்கேற்க இயலாது என்று சொல்லிவிட்டாராம்.
எனவே அவருக்கு பதிலாக நடிகை நித்யா மேனன் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மிக மோசமான நிலையில் ஈரான்! டிரம்ப் பேட்டி | US | Iran | Trump
அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தை தோல்வி எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு!

ஏப். 19-ல் சென்னை வருகிறார் அமித் ஷா!

பட்ஜெட் விலையில் ரெட்மியின் புதிய ஸ்மார்ட்போன்! ஏ7 ப்ரோ அறிமுகம்!
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


