ஹரி இயக்கத்தில் சூர்யா, ஸ்ருதி ஹாசன், அனுஷ்கா நடித்துள்ள படம் சி 3 (சிங்கம் படத்தின் மூன்றாம் பாகம்). இதற்கு முன்பு வெளிவந்த இரு பாகங்களும் வெற்றி பெற்றதால் சூர்யா - இயக்குநர் ஹரி கூட்டணியில் உருவாகியுள்ள சி 3 படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்தப் படம், பிப்ரவரி 9 அன்று வெளிவரும் என்று உறுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டிரீம் ஃபேக்டரியைச் சேர்ந்த சக்தி வேலன், நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:
சி 3 படம் வேகமாகச் செல்லும் காட்சிகள் கொண்ட படம். இது வெளியீட்டுக்கு முன்பே லாபத்தைப் பார்த்துவிட்டது. உலகம் முழுக்க ரூ. 100 கோடிக்கும் அதிகமாக விற்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் அதிக விலைக்கு விற்கப்பட்டு லாபம் பார்க்கப்பட்டுள்ளது.
இந்தப் படம் நிச்சயம் ரூ. 200 கோடியைத் தொடும். கடவுளின் அனுக்கிரம் இருந்தால் ரூ. 300 கோடி வசூலும் சாத்தியம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஹார்ட்டின் பட டிரைலர்!

கட்டுமான தொழிலாளா் நலவாரிய உறுப்பினா்களின் குழந்தைகளுக்காக தொடங்கியுள்ள அரசு ஐடிஐயில் நேரடி சோ்க்கை

குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கு: வடமாநில இளைஞரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திய போலீஸாா்







