இயக்குநர் பிரபு சாலமனின் போலி ட்விட்டர் கண்ணால் சமூகவலைத்தளத்தில் சர்ச்சை உண்டானது.
இயக்குநர் பிரபு சாலமன் பெயரில் உள்ள ட்விட்டர் கணக்கில் எழுதப்பட்டிருந்ததாவது: கதாநாயகிகள்: ஒருநாள் செலவு ரூ. 85,000 + ரூ. 2.50 கோடி சம்பளம், ஓட்டுநர், கேரவன். ஒருநாளைக்கு 5 மணி நேரத்துக்கு மேல் நடிக்கமுடியாது. பிரபல நட்சத்திரத்தின் மகள் என்று ட்வீட் செய்யப்பட்டிருந்தது.
இந்த ட்வீட் மறைமுகமாக ஷ்ருதி ஹாசனைக் குறிப்பிடுவதால் சர்ச்சை ஏற்பட்டது. இந்நிலையில் அது போலி ட்விட்டர் கணக்கு என்று அறிந்தபிறகு இந்தப் பரபரப்பு குறைந்தது. இதையடுத்து இயக்குநர் பிரபு சாலமன் அந்த ட்விட்டர் கணக்கை முடக்குமாறு காவல்துறைக்குப் புகார் அளிப்பார் என்றறியப்படுகிறது.
இயக்குநர் பிரபு சாலமன் தற்போது கும்கி 2 கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த மாத இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.