ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

ஜூலை 14 அன்று வெளியாகும் நான்கு படங்கள்! 

ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த இந்தப் படம் ஜூலை 7-ம் தேதி வெளிவருவதாக இருந்தது...

News image
Updated On :8 ஜூலை 2017, 10:22 am

எழில்

விக்ரம் வேதா, பண்டிகை, ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், கூட்டத்தில் ஒருத்தன்...

இந்த நான்கு படங்களும் அடுத்த வாரம் ஜூலை 14 அன்று வெளிவரவுள்ளது. 

விஜய் சேதுபதி - மாதவன் இணைந்து நடித்துள்ள படம் விக்ரம் வேதா. ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த இந்தப் படம் ஜூலை 7-ம் தேதி வெளிவருவதாக இருந்தது. பிறகு அதன் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்தப் படம் தணிக்கையில் மறு ஆய்வுக்கு விண்ணப்பித்துள்ளது. யூ/ஏ கிடைக்கும் பட்சத்தில் இந்தப் படமும் ஜூலை 14 அன்று நிச்சயம் வெளிவரவுள்ளது.

விக்ரம் வேதா படத்தை சசிகாந்தின் ஒய்நாட் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. வரலட்சுமி, ஷ்ரதா ஸ்ரீநாத் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள். இசை - சாம் சி.எஸ். ஆக்‌ஷன் த்ரில்லர் வகையில் இப்படம் அமைந்துள்ளது. 

ஒரே நாளில் நான்கு படங்களும் வெளிவருவதால் ஒவ்வொரு படமும் மற்ற படத்தால் பாதிக்கப்படும் என்று அஞ்சப்படுகிறது. அதிலும் விக்ரம் வேதா படம் வெளிவருகிற பட்சத்தில் மற்ற 3 சிறிய படங்களும் பாதிக்கப்படும் என்றறியப்படுகிறது. இதனால் கடைசி சமயத்தில் ஒன்றிரண்டு படங்களி வெளியீடு தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.