நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

திரைப்பட விருதுகள்: இயக்குநர் சுசீந்திரன் வருத்தம்!

தன்னுடைய படங்களுக்கு விருதுகள் அளிக்கப்படாதது குறித்து இயக்குநர் சுசீந்திரன் வருத்தம் தெரிவித்துள்ளார்...

News image
Updated On :14 ஜூலை 2017, 9:11 am

எழில்

தமிழ்த் திரைப்படத் துறையில் சிறந்த படம், நடிகர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான விருதுகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று அறிவித்தார். 2009-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரை ஆறு ஆண்டுகளுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 2009-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரையிலான விருதுகளின் பெயர்ப் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதில் தன்னுடைய படங்களுக்கு விருதுகள் அளிக்கப்படாதது குறித்து இயக்குநர் சுசீந்திரன் வருத்தம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

என்னுடைய படங்களை எந்த விருதுக்கும் தேர்வு செய்யப்படாததற்குத் தேர்வுக்குழுவுக்கு என்னுடைய வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக தேசிய விருது பெற்ற அழகர்சாமியின் குதிரை மற்றும் அனைவராலும் பாராட்டுப் பெற்ற நான் மகான் அல்ல படத்தின் இறுதிக்கட்டச் சண்டைக்காட்சிக்காக அனல் அரசுவைத் தேர்வு செய்யாததும் எனக்கு ஆச்சர்யத்தை அளிக்கிறது என்று தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.