நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

டாடா ஸ்கை விளம்பரத் தூதர் - நயன்தாரா! புதிய விளம்பரம் வெளியீடு!

டாடா ஸ்கையின் தென்னிந்தியாவுக்கான விளம்பரத் தூதராக நடிகை நயன்தாரா நியமிக்கப்பட்டுள்ளார்...

News image
Updated On :21 ஜூலை 2017, 5:26 am

எழில்

டாடா ஸ்கை நிறுவனத்தின் தென்னிந்தியாவுக்கான விளம்பரத் தூதராக நடிகை நயன்தாரா நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள டாடா ஸ்கை-யின் விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் இந்த விளம்பரம் படமாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நயன்தாரா கூறியதாவது: டாடா ஸ்கை போன்ற பெரிய நிறுவனத்தின் விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டதற்கு மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். டாடா ஸ்கையின் விளம்பரங்களை எப்போதும் நான் ரசித்துள்ளேன் என்று கூறியுள்ளார். 

தென்னிந்தியாவுக்கான விளம்பரத் தூதராக நயன்தாராவை நியமித்துள்ள டாடா ஸ்கை, நாட்டின் இதரப் பகுதிகளுக்கான விளம்பரத் தூதராக அமிதாப் பச்சனை நியமித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.