வேலையில்லா பட்டதாரி 2 பட விளம்பர நிகழ்ச்சிகளுக்காக ஹைதராபாத் சென்ற தனுஷ், தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்தபோது சர்ச்சைக்குரிய கேள்விகள் கேட்கப்பட்டதால் பாதியில் வெளியேறினார்.
படம் தொடர்புடைய பேட்டியில் பங்கேற்ற தனுஷிடம் சர்ச்சைக்குரிய கேள்விகள் கேட்கப்பட்டன. சுசித்ரா ட்விட்டர் சர்ச்சை தொடர்பாகக் கேட்கப்பட்ட கேள்விகளால் கடுப்பானார் தனுஷ். தனுஷின் வீடியோ வெளியிடப்படுவதாகச் சொன்னதால் மன உளைச்சல் உண்டானதா என்கிற கேள்விக்கு மறுத்துப் பதில் அளித்தார் தனுஷ். தன் மீது எவ்வித குற்றச்சாட்டும் கிடையாது என்றார்.
அவருடைய மண வாழ்க்கையில் சிக்கல் ஏற்பட்டுள்ளதா என்கிற கேள்வியைக் கேட்டபோது மேலும் கோபமடைந்தார் தனுஷ். இது ஒரு கேவலமான பேட்டி என்று பேட்டியின் பாதியிலேயே வெளியேறினார்.
பிறகு தனுஷைச் சமாதானம் செய்து பேட்டி முழுமையாகப் படமாக்கப்பட்டது. அப்போது படம் தொடர்பான கேள்விகளே தனுஷிடம் கேட்கப்பட்டன.
சில மாதங்களுக்கு முன்பு, பாடகி சுசித்ராவின் ட்விட்டர் கணக்கில் இருந்து தனுஷ் மற்றும் இதர பிரபலங்களைப் பற்றி பல்வேறு விதமான ட்வீட்கள் வெளியாகின. இதனால் ட்விட்டர் வலைத்தளத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சுசித்ராவின் ட்விட்டர் கணக்கு ஹேச் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியானது. பிரபல நடிகர், நடிகைகளின் புகைப்படங்கள், வீடியோக்கள், மின்னஞ்சல்கள் என தனிப்பட்ட தகவல்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டதால் தமிழ்த் திரையினர் மிகுந்த கவலையடைந்தனர். பிறகு, அத்தகைய புகைப்படங்களும் வீடியோக்களும் அவருடைய ட்விட்டர் கணக்கிலிருந்து அகற்றப்பட்டன. சுசித்ராவின் ட்விட்டர் கணக்கும் நீக்கப்பட்டது. இதனால் சுசித்ராவின் ட்விட்டர் சர்ச்சைகளுக்கு முடிவுகட்டப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வழக்குரைஞரான பேரறிவாளன்! தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலில் பதிவு!
தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவில்லை: நடிகர்கள் சங்கம் அறிவிப்பு

பவர்பிளேவில் 13 ரன்கள்; ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனை!

ஈரானுக்கு உதவ ரஷியா தயார்! - விளாதிமீர் புதின்
வீடியோக்கள்
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


