சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஓவியா, வெளியே வந்துவிடு: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உருக்கமான பதிவு!

ஒட்டுமொத்த தமிழ்நாடும் தங்கள் குடும்பத்தில் ஒருவராக உங்களை வரவேற்கக் காத்துக் கொண்டிருக்கிறது...

News image
Updated On :26 ஜூலை 2017, 10:12 am

எழில்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியாவுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்த் திரையுலகினர் சமூகவலைத்தளங்களில் கருத்து தெரிவித்துவருகிறார்கள். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உருக்கமாக ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளார் நடிகை ஓவியா. அவருடைய குணாதிசயங்களுக்கும் துணிச்சலான பேச்சுக்கும் நாளுக்கு நாள் அதிகப் பாராட்டுகள் கிடைத்து வருகின்றன. கடந்த வாரம் ஓவியாவுக்கும் ஜூலிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் பரணி போல ஓவியாவும் இந்த நிகழ்ச்சியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அதேசமயம், சமூகவலைத்தளங்களில் ஓவியாவின் ரசிகர்கள் ஓவியாவுக்கு ஆதரவாகவும் காயத்ரி ராகுராம், நமீதா, ஜூலி, சக்தி ஆகியோருக்கு எதிராகவும் ஏராளமான பதிவுகளை எழுதிவருகிறார்கள். சேவ் ஓவியா, ஓவியா ஆர்மி போன்ற ஹேஷ்டேக்குகள் பிரபலமாகிவருகின்றன. 

தமிழ்த் திரையுலகினர் சமூகவலைத்தளம் வழியாக ஓவியாவுக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளார்கள். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ட்விட்டரில் கூறியதாவது: 

ஓவியா தயவுசெய்து வெளியே வந்துவிடு. ஒட்டுமொத்த தமிழ்நாடும் தங்கள் குடும்பத்தில் ஒருவராக உங்களை வரவேற்கக் காத்துக்கொண்டிருக்கிறது. அவர் அழுவதை என்னால் காணமுடியவில்லை என்று எழுதியுள்ளார்.

கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா - ஜூலி இடையே மோதல் நடைபெற்றது. இதைப் பற்றியும் ஐஸ்வர்யா ட்விட்டரில் எழுதியதாவது: ஜூலி மோசம், ஜூலிக்கு ஆஸ்கர் வழங்கலாம், ஓவியா.. அடி மா நீ அவள ஜூலியை என்று ஓவியாவுக்கு ஆதரவாகவும் ஜூலிக்கு எதிராகவும் தனது கருத்துகளைப் பதிவு செய்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.