விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

புத்த மதத்துக்கு மாறிய மகளுக்கு கமல் வாழ்த்து!

எனக்கு புத்த வழிபாடு மிகவும் பிடிக்கும். அது மதம் சார்ந்ததல்ல. வாழ்வியலோடு கலந்தது... 

News image
Updated On :28 ஜூலை 2017, 10:29 am

எழில்

சமீபத்தில் ஒரு பேட்டியில் கமலின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன், தான் முதலில் நாத்திகராக இருந்ததாகவும் தற்போது புத்த மதத்துக்கு மாறிவிட்டதாகவும் கூறியுள்ளார். ‘எனக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனால், கடவுளை நம்புகிறவர்களுக்கு எப்போதும் மதிப்பளிப்பேன். எனக்கு புத்த வழிபாடு மிகவும் பிடிக்கும். அது மதம் சார்ந்ததல்ல. வாழ்வியலோடு கலந்தது. அதில் நிறைய விஷயங்கள் கற்றுவருவதால் என்னை புத்த வழிபாட்டில் இணைத்துக்கொண்டேன்’ என்றார்.

இதையடுத்து மகளுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார் கமல். அதில் அவர் கூறியதாவது: ஹாய் அக்‌ஷு, நீ மதம் மாறிவிட்டாயா? அப்படியெனில் நான் உன்னை வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.

சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் - விவேகம். இப்படத்தில் காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் விவேக் ஓப்ராய் நடித்துள்ளார். இது அவர் நடிக்கும் முதல் தமிழ்ப் படம். இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துவருகிறது. இசை - அனிருத். ஆகஸ்ட் 10 அன்று இந்தப் படம் வெளிவருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.