சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் மோகன் ராஜா இயக்கி வரும் படம் - வேலைக்காரன். 24ஏம் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இதன் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
வேலைக்காரன் படம் செப்டம்பர் 29 அதாவது ஆயுத பூஜை அன்று வெளிவருகிறது. செப்டம்பர் 29 - ஆயுத பூஜை. அடுத்த செப். 30, அக்டோபர் 1, 2 ஆகிய அனைத்தும் அரசு விடுமுறை தினங்கள். இதனால் தொடர்ந்து 4 தினங்கள் விடுமுறையாக உள்ளதால் இது வசூலுக்கு மிகவும் உதவும் என்று அச்சமயத்தில் வேலைக்காரன் படம் வெளிவருகிறது.
சிவகார்த்திகேயனின் முந்தைய படமான ரெமோவும் ஆயுத பூஜை சமயத்தில் வெளியாகி வசூலை அள்ளியது. அக்டோபர் 7-ம் தேதி வெளியான அந்தப் படம் தொடர்ந்து 6 நாள்கள் சீரான வசூலை அள்ளி மகத்தான சாதனை படைத்தது. முதல் நாளிலேயே ரூ. 8 கோடி வரை வசூல் செய்தது. முதல்வார விடுமுறை தினங்களின் வசூலாக ரூ. 50 கோடியை அள்ளியது. இந்தப் படத்துக்குத் தமிழ்நாட்டில் ரூ. 37 கோடியும் வெளிநாட்டில் ரூ. 13 கோடியும் முதல் வாரத்தில் கிடைத்தது. இப்படி, சிவகார்த்திகேயனின் படங்களில் அதிக வசூல் கண்ட படம் ரெமோதான். அதேபோன்றதொரு வசூலை அடைய வேலைக்காரன் படமும் அதே பாணியில் வெளிவரவுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் முதல் பார்வை இன்று மாலை வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கலவரத்தில் காங்கிரஸ் தொண்டர் பலி: மமதாவுக்கு ராகுல் கண்டனம்

மதுரை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் மயங்கி விழுந்து பலி

கொல்கத்தாவில் பிரதமர் மோடி சாலை வலம்!

வெள்ளிச்சுடரே பாடல்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


