பண்டிகை - இளைஞர்கள் இடையே பொழுது போக்காக துவங்கி, பந்தய போட்டியாக தொடரும் சண்டை போட்டிகள் பற்றிய வித்யாசமான திரில்லர் மற்றும் காதல் கலந்த படம் தான் 'பண்டிகை'.
சட்டத்துக்கு விரோதமாக நடக்கும் சண்டை போட்டிகளை மையமாக வைத்து நெய்யப்பட்டுள்ள இப்படத்தில் கிருஷ்ணா மற்றும் அனந்தி நடித்துள்ளனர். 'டீ டைம் டாக்கீஸ்' தயாரித்து 'ஆரா சினிமாஸ்' வெளியிட உள்ள இப்படத்தை பெரோஸ் இயக்கியுள்ளார்.
சந்தர்ப்ப சூழ்நிலைகளால் சட்ட விரோத சண்டை போட்டிக்கு தள்ளப்பட்ட ஓர் கோபக்கார இளைஞனின் காதல்தான் பண்டிகை. காதலிலும் ஆக்ஷனிலும் சரியான அளவில் பயணிக்கும் படம் இது . படத்தை பார்த்து எங்கள் குழுவினருக்கு பெரும் மகிழ்ச்சியும் உற்சாகமும் ஏற்பட்டது. நல்ல படங்களை வெளியிட்டு வெற்றிகளை குவித்துக்கொண்டிருக்கும் 'ஆரா சினிமாஸ்' எங்கள் படத்தை வெளியிட முன்வந்ததினால் எங்களது உழைப்பும் படத்தின் தரமும் ஊர்ஜிதமானது. சுருக்கமாக கூற வேண்டுமென்றால் பண்டிகை மக்கள் திரையரங்குகளுக்கு வந்து கொண்டாட்டதுடன் ரசிக்க வேண்டிய படம்' என கூறினார் இயக்குனர் பெரோஸ் .
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக

மதுரை நகரை வந்தடைந்தார் கள்ளழகர்! எதிர்சேவையில் ஆடல், பாடலுடன் உற்சாக வரவேற்பு!!

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


