தமிழ் சினிமாவை அலற வைக்கும் பாடகி சுசித்ராவின் ட்விட்டர் கணக்கு!

தமிழ் சினிமாவை அலற வைக்கும் பாடகி சுசித்ராவின் ட்விட்டர் கணக்கு!

பாடகி சுசித்ராவின் ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய பதிவுகள் வெளியிடப்பட்டதால் தமிழ் சினிமாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Published on

பாடகி சுசித்ராவின் ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய பதிவுகள் வெளியிடப்பட்டதால் தமிழ் சினிமாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

நடிகை பாவனாவுக்கு நிகழ்ந்த சம்பவத்துக்குப் பிறகு பலரும் தங்களுக்குத் திரையுலகில் நேர்ந்த அனுபவங்கள் குறித்து வெளிப்படையாக எழுதிவருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக சுசித்ராவின் ட்விட்டர் கணக்கில் இருந்து தனுஷ் மற்றும் இதர பிரபலங்களைப் பற்றி பல்வேறு விதமான ட்வீட்கள் வெளியாகின. இதனால் ட்விட்டர் வலைத்தளத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சுசித்ராவின் ட்விட்டர் கணக்கு ஹேச் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியானது. ஆனால் இதைச் சரிகட்டும் விதமாக சுசித்ராவின் செல்பி புகைப்படமும் ஒன்றும் வெளியிடப்பட்டது. இதனால் பயங்கர குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில் சுசித்ராவின் கணவரும் நடிகருமான கார்த்திக் இந்த விவகாரம் குறித்து ஃபேஸ்புக்கில் கூறியதாவது: சுசித்ராவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது. இதனால் எங்கள் குடும்பமே மனத்தளவில் பாதிக்கப்பட்டுள்ளோம். இன்று அவருடைய ட்விட்டர் கணக்கை மீட்டுவிட்டோம். கடந்த சில நாள்களாக வெளிவந்த ட்வீட்களை சுசித்ரா வெளியிடவில்லை. அவை அனைத்தும் போலியானவை. இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்கிறேன். அவர்களுக்கு இது எந்தளவுக்கு மன அழுத்ததை ஏற்படுத்தியிருக்கும் என்பதை நான் அறிவேன். ஊடகங்கள் இதைப் பரபரப்பாக வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார். 

இந்நிலையில், சுசித்ராவின் ட்விட்டர் கணக்கிலிருந்து பிரபல நடிகர், நடிகைகள், டிவி தொகுப்பாளினியின் அந்தரங்கப் புகைப்படங்கள் நேற்று வெளியிடப்பட்டன. இதையடுத்து சமூகவலைத்தளங்களில் பரபரப்பு உண்டாகியது. பிறகு அப்புகைப்படங்கள் அகற்றப்பட்டன.

தன்னுடைய ட்விட்டர் கணக்கு மீண்டும் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக பாடகி சுசித்ரா கூறினார். இருந்தும் அவருடைய ட்விட்டர் கணக்கில் இருந்து நேற்றிரவு சர்ச்சைக்குரிய பதிவுகள் தொடர்ந்து வெளியிடப்பட்டன.  

பிரபல நடிகர், நடிகைகளின் புகைப்படங்கள், வீடியோக்கள், மின்னஞ்சல்கள் என தனிப்பட்ட தகவல்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டதால் தமிழ்த் திரையினர் மிகுந்த கவலையடைந்தனர்.  

தற்போது அத்தகைய புகைப்படங்களும் வீடியோக்களும் அவருடைய ட்விட்டர் கணக்கிலிருந்து அகற்றப்பட்டுள்ளன. இதையடுத்து சுசித்ராவின் சர்ச்சைப் பதிவுகளுக்கு ஒரு முடிவு ஏற்படும் என்று நம்பப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com