இயக்குநர் சற்குணம் தயாரிப்பில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ள படம் "டோரா.' இப்படத்தை தாஸ் ராமசாமி எழுதி இயக்கியுள்ளார். தனக்கென தனித்துவம்மிக்க கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்த "அனாமிகா', "மாயா' போன்ற படங்களில் படத்தின் ஒரு சில காட்சிகளில் மட்டுமே ஹீரோக்கள் வந்து போனார்கள். ஆனால் "டோரா' படத்தைப் பொறுத்தவரை நயன்தாராவுக்கு ஜோடியாக காதலர் அல்லது கணவர் கதாபாத்திரங்கள் எதுவும் இல்லை. ஒரு கொலையும், அதைச் சுற்றிய சம்பவங்களும்தான் கதை.
தம்பி ராமையா, ஹரிஸ் உத்தமன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இப்படத்தை சற்குணம் சினிமாஸ் முதல் பிரதி முறையில் தயாரிப்பாளர் நேமிசந்த் ஜபக் நிறுவனத்திற்காக தயாரித்துள்ளது. விவேக் - மெரிவின் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படம் மார்ச் 31-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டோரா படத்துக்குத் தணிக்கையில் ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. படம் வெளியாகும் தேதி நெருங்கிவிட்டதால் மறு தணிக்கைக்குச் செல்லாமல் ஏ சான்றிதழோடு வெளியிட முடிவு செய்துள்ளார்கள். இந்நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன், டோராவுக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது குறித்து ஆச்சர்யமடைந்துள்ளார்.
ட்விட்டரில் அவர் கூறியதாவது: டோரா - ஏ சான்றிதழ்; மாநகரம் - யூ/ஏ சான்றிதழ்; துருவங்கள் 16 - யூ/ஏ சான்றிதழ். ஆனால் சில படங்கள் யூ சான்றிதழைப் பரிசாகப் பெற்றுள்ளன. நமது தணிக்கைக் குழுவை நாளுக்கு நாள் மிகவும் விரும்புகிறேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஒட்டுமொத்த மத்திய அமைச்சரவையையும் களமிறக்கி பாஜக பிரசாரம் செய்தும் பலனளிக்காது! - மமதா
கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்!

போதிய பேருந்து வசதி இல்லை! 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வாக்களிக்க முடியவில்லை! - Nirmal Kumar | TVK

தற்கொலை எண்ணத்தில் இருந்தேன்: ரத்னகுமார்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


