சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

ரஜினியும் ராஜமெளலியும் இணைந்தால்..: கற்பனைக் குதிரையைத் தட்டிவிடும் பிரபல இயக்குநர்!

ரஜினி - ராஜமெளலி கூட்டணி வருங்காலத்தில் சாத்தியமாகும் என்கிற நம்பிக்கை உங்களுக்கு உள்ளதா?

News image
Updated On :1 மே 2017, 7:12 am

பாகுபலி 2 படம் மெகா ஹிட். இந்திய சினிமாவின் நெ.1 இயக்குநர் ஆகிவிட்டார் இயக்குநர் ராஜமெளலி. அவர் ரஜினியை வைத்து படம் இயக்கினால் அது எப்படி இருக்கும்?

இப்படி யோசித்துள்ளீர்களா? 

பிரேமம் புகழ் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இதுகுறித்து கூறியதாவது:

இயக்குநர் ராஜமெளலி, ரஜினியை வைத்து ஒரு படம் இயக்குவார் என நம்புகிறேன். அப்படி நடந்தால், அது உலக அளவிலான அவதார் பட வசூல் இரண்டாம் இடத்துக்குச் சென்றுவிடும் என்று கூறியுள்ளார். 

இயக்குநர் ராஜமெளலி இதற்கு முன்பு தமிழில் படம் இயக்குவது குறித்து கூறியிருந்தார். அப்போது தான் தமிழில் படம் இயக்குவதா இருந்தால் அது ரஜினியுடன்தான். கையில் கதை எதுவும் இல்லாவிட்டாலும் அவருடன் பணிபுரியவேண்டும் என்பது நீண்டநாள் விருப்பம் என்று கூறியிருந்தார்.

பாகுபலி படம் பார்த்த ரஜினி, ராஜமெளலிக்கு வாழ்த்து கூறியுள்ளார். அதற்கு மிகவும் உணர்ச்சிவசப்பட்டு ராஜமெளலியும் பதில் அளித்துள்ளார்.

இதையெல்லாம் பார்க்கும்போது,  ரஜினி - ராஜமெளலி கூட்டணி வருங்காலத்தில் சாத்தியமாகும் என்கிற நம்பிக்கை உங்களுக்கு உள்ளதா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.