18 வருட திருமண வாழ்க்கையை முடித்துக்கொண்ட பிரபல பாலிவுட் நடிகை!

கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து கோரி குடும்பநல நீதிமன்றத்தில் மனு செய்தார்கள். நேற்று இருவருக்கும்...
18 வருட திருமண வாழ்க்கையை முடித்துக்கொண்ட பிரபல பாலிவுட் நடிகை!
Updated on
1 min read

18 வருடங்களுக்கு முன்பு, 1998-ம் வருடம் பாலிவுட் நடிகை மலாய்கா அரோரா - அர்பாஸ் கான் ஆகியோருக்குத் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியருக்கு 14 வயது மகன் உள்ளார். (மலாய்கா, மணிரத்னத்தின் உயிரே படத்தில் இடம்பெற்ற தைய்யா தைய்யா பாடலில் ஷாருக் கானுடன் இணைந்து நடனமாடியவர்.) 

43 வயது மலாய்காவும் சல்மான்கான் சகோதரரான 49 வயது அர்பாஸும் கடந்தவருடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் சுமூகமாக பிரிவது என்று முடிவு செய்தார்கள். பாந்திரா குடும்ப நல நீதிமன்றத்தில் பரஸ்பரம் விவாகரத்து கேட்டு மனுத்தாக்கல் செய்தனர். மனமொன்றி இருவரும் பிரிய விரும்புவதாகவும், எங்களுக்கு விவாகரத்து வழங்க வேண்டும் என்று மனு அளித்தார்கள்.

இதையடுத்து மலாய்கா - அர்பாஸ் ஆகியோருக்குப் பரஸ்பரம் விவாகரத்து வழங்கி, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com