நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இந்தியாவில் முதல்முறையாக ரூ. 400 கோடியைக் கடந்து ஹிந்தி பாகுபலி 2 சாதனை!

ஹிந்தியில் டப் செய்து வெளியிடப்பட்ட பாகுபலி 2 படம் மகத்தான சாதனை ஒன்றைச் செய்துள்ளது.

News image
Updated On :13 மே 2017, 5:52 am

எழில்

ஹிந்தியில் டப் செய்து வெளியிடப்பட்ட பாகுபலி 2 படம் மகத்தான சாதனை ஒன்றைச் செய்துள்ளது.

இந்தியாவில் ஹிந்தி பாகுபலி 2, நேற்றுடன் ரூ. 400 கோடிக்கும் அதிகமாக வசூலித்து மகத்தான சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் ரூ. 400 கோடி வசூலைக் கண்ட முதல் ஹிந்திப் படம் என்கிற பெருமையைப் பெற்றுள்ளது.

இந்தியாவில் முதல் வாரம் ரூ. 247 கோடி வசூலை அடைந்த ஹிந்தி பாகுபலி 2, அடுத்த வாரம் பெரிய அளவில் குறையாமல் ரூ. 143 கோடியை அள்ளியது. நேற்று இதன் வசூல் ரூ. 400 கோடியைத் தொட்டது. கடந்த வியாழன் அன்று கூட ஹிந்தி பாகுபலி 2, இந்தியாவில் ரூ. 13 கோடி வசூலைப் பெற்றது. அந்தளவுக்கு இன்னமும் மக்களின் மகத்தான பேராதரவுடன் ஓடிக்கொண்டிருக்கிறது.

ஹிந்தியில் ரூ. 100 கோடியைத் தொட்ட முதல் படம் - கஜினி (2008). அடுத்த வருடம் வெளியான 3 இடியட்ஸ் ரூ. 200 கோடியைத் தொட்டது. 2014-ல் வெளியான பிகே ரூ. 300 கோடி என்கிற உயரத்தைத் தொட்டது. அமீர் கான் படங்களே ஒவ்வொருமுறையும் புதிய உயரத்தை நிர்ணயிக்கும்போது, இப்போது ஹிந்தித் திரையுலகுக்கு அறிமுகம் இல்லாத ராஜமெளலி - பிரபாஸ் கூட்டணி இந்த நம்பமுடியாத சாதனையை நிகழ்த்திக்காட்டியுள்ளது.

பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள படம் - 'பாகுபலி தி கன்க்ளூஷன்’ (பாகுபலி 2). ஏப்ரல் 28 அன்று வெளியான பாகுபலி 2, இந்தியாவில் மட்டும் 9,000 திரையரங்குகளில் வெளியானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.