நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

68 மணி நேரத்தில் 1 கோடி பார்வையாளர்கள் : கபாலியை பின்னுக்குத் தள்ளிய விவேகம்! 

வெளியாகி 68 மணி நேரத்தில் 1 கோடி பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட டீசர் என்ற பெருமையை நடிகர் அஜித்தின் 'விவேகம்' டீசர் பெற்றுள்ளது.

News image
Updated On :14 மே 2017, 7:36 am

DIN

சென்னை: வெளியாகி 68 மணி நேரத்தில் 1 கோடி பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட டீசர் என்ற பெருமையை நடிகர் அஜித்தின் 'விவேகம்' டீசர் பெற்றுள்ளது. இதன்  'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்தின் 'கபாலி' பட டீசர் வசம் இருந்த  சாதனையை  இது முறியடித்துள்ளது.

இயக்குனர் `சிறுத்தை' சிவா இயக்கத்தில், அஜித் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் `விவேகம்' காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் மற்றும் விவேக் ஓபராய் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் திரைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில் இந்த படத்தின் டீசர் கடந்த வியாழனன்று(11.5.17) நள்ளிரவு 12.01-க்கு வெளியானது. வெளியான 12 மணிநேரத்திலேயே அப்பொழுது வரை முதலிடத்தில் இருந்த `கபாலி' படத்தின் டீசர் சாதனையை தகர்த்தது. தற்பொழுது வெளியாகிய 68 மணிநேரத்தில் 1 கோடி (10 மில்லியன்) பார்வையாளர்களை பெற்று புதிய சாதனையையும் இந்த டீசர் படைத்திருக்கிறது.

ரஜினிகாந்தின் `கபாலி' டீசர் வெளியாகி 3 நாட்களில் படைத்த சாதனையை `விவேகம்' டீசர் 68 மணிநேரத்திலேயே படைத்திருப்பதன காரணமாக அஜித் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

அத்துடன் அஜித் பட டீசர் ஒன்று 1 கோடி பார்வையாளர்களை பெற்றிருப்பது இதுவே முதல்முறை என்பதும் கவனிக்கத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.