சென்னை: புதுமுக இயக்குனர் முருகானந்தம் இயக்கத்தில், நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள 'கதாநாயகன்' படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
மாவீரன் கிட்டு படத்திற்கு பிறகு நடிகர் விஷ்ணு விஷால் புதுமுக இயக்குனர் முருகானந்தம் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இப்படத்தில் அவருடன் கேத்தரீன் தெரசா, சூரி உள்ளிட்ட பலர் நடித்து வந்தார்கள். மேலும் நடிகர் விஜய் சேதுபதி இப்படத்தில் கவுரவ வேடம் ஒன்றில் நடித்துள்ளார். இப்படத்தை விஷ்ணு விஷாலே தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. தற்பொழுது படத்தின் இறுதிகட்டப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் கதாநாயகன் படத்தின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டரை நடிகர் தனுஷ் வெளியிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாமக்கல்லில் பாரதிதாசன் பிறந்த நாள் விழா

சேலம் கோட்டத்தில் இன்றுமுதல் 500 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

வாழப்பாடியில் சித்திரைத் திருவிழா ஆழித்தேரோட்டம்!

கோனேரிப்பட்டி காளியம்மன் கோயில் பொங்கல் விழா
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


