சென்னை: சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர் 'ஜெயம்' ரவி, ஆர்யா மற்றும் ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் நடிக்கும் சங்கமித்ரா பட துவக்க விழாவானது, உலகப் புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் நடைபெற உள்ளது
பிரான்சில் உள்ளது கேன்ஸ் நகரம்.இங்கு வருடம் தோறும் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவானது உலகப் புகழ் பெற்றது. 70-ஆவது ஆண்டு திரைப்பட விழாவானது இன்று தொடங்கி வரும் 28-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது இந்த திரைப்பட விழாவில் நடிகர் 'ஜெயம்' ரவி, ஆர்யா மற்றும் ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் நடிக்கும் சங்கமித்ரா பட துவக்க விழாவானது நடைபெற உள்ளது. இதற்காக சங்கமித்ரா படக்குழுவினர் செவ்வாய் இரவு கேன்ஸ் புறப்பட்டு சென்றனர்.
இது தொடர்பாக நடிகர் ஜெயம் ரவி தனது டிவிட்டர் பக்கத்தில், 'சங்கமித்ரா துவக்க விழாவுக்காக கேன்ஸ் புறப்படுகிறோம்.கனவு நனவான தருணம்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த படத்தினை தயாரிக்கும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இரண்டு பாகங்களாகத் தயாரிக்கப்படும் இந்தப் படத்தில் ஆர்யா மற்றும் சுருதி ஹாசன் ஆகியோர் நடிக்கின்றனர் என்றும், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் இந்த படமானது, பின்னர் ஹிந்தியில் டப் செய்து வெளியிடப்படுமென்றும் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தலைவர்கள், திரைப் பிரபலங்கள் வாக்களிப்பு - புகைப்படங்கள்
சூரியின் மண்டாடி படப்பிடிப்பு நிறைவு! சிறப்பு விடியோ!

தலைவர்கள், பிரபலங்கள் வாக்களிப்பு - புகைப்படங்கள்

சாய் சுதர்சன் அதிரடி சதம்: பெங்களூருக்கு 206 ரன்கள் இலக்கு!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


