நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

காலா திரைப்படத்தில் ஒப்பந்தமாகிறார் பாலிவுட் நடிகை அஞ்சலி படீல்

சூப்பர் ஸ்டாரின் காலா படத்தைப் பற்றிய செய்திகள்தான் சம்மரை விட செம ஹாட்

News image
Updated On :26 மே 2017, 9:04 am

DIN

பா. ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் படமான 'காலா' படத்தைப் பற்றிய செய்திகள்தான் சம்மரை விட செம ஹாட்டாக வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் படத்தில் வேறு யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். 

சமுத்திரக்கனி,  ஹியுமா குரேஷி ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அஞ்சலி படீல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி நேற்று வெளியானது. அஞ்சலி படீலும் இதனை உறுதி செய்வதாக, தனது டிவிட்டர் பக்கத்தில் இச்செய்தியை பகிர்ந்துள்ளார். ('Next film for this year. With THE ONE AND ONLY. Thalaiva. Produced by @dhanushkraja, Directed by @beemji..#Rajnikanth #Superstar #Kaala')

Story image

டோலிவுட்டில் அறிமுகமாகி, பாலிவுட்டில் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை அஞ்சலி படீல், 'ஃபைண்டிங் ஃபானி', 'மிஸ்ரியா’ போன்ற படங்களில் நடித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தலைவருடன் என்னுடைய அடுத்த படம் என்ற மகிழ்ச்சியுடன் ஒரு டீவீட் செய்தியை வெளியிட்டுள்ளார்.

‘பிரத்யாயம்’ எனும் தெலுங்குப் படத்தின் மூலம் 2012-ம் ஆண்டு டோலிவுட்டில் அறிமுகமானவர் அஞ்சலி படீல். அதன் பின் 2013-ல் வெளியான  ‘நா பங்காரு தல்லி’ என்னும் தெலுங்குப் படத்துக்காக தேசிய விருது மற்றும் நந்தி விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதுவரை இந்தி, தெலுங்கு, மராத்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ள  அஞ்சலி படீல், தமிழில் நேரிடியாக நடிக்கும் முதல் படம் 'காலா'. (அவரது தெலுங்குப் படங்கள் தமிழில் டப் செய்து வெளிவந்துள்ளது). காலாவில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடிக்க உள்ளார் என்றாலும் அது என்ன என்பது இன்னும் தெரியாத நிலையில், ரஜினியுடன் நடிப்பதை மிகப் பெருமையாக நினைக்கிறேன் என்று சந்தோஷப்படுகிறார் அஞ்சலி படீல். பாலிவுட் ரசிகர்கள் அவருக்கு தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பும், ஒளிப்பதிவை முரளி, சண்டைப் பயிற்சியை திலீப் சுப்பராயன் பணிபுரியவிருக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மே 28-ம் தேதி முதல் மும்பாயில் துவங்கும் என்று கூறினர் படக்குழுவினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.