ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன் பாடிய பாடல்!

சச்சின் டெண்டுல்கர் நடித்து மே 26-ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் 'சச்சின் எ பில்லியன்
ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன் பாடிய பாடல்!
Updated on
1 min read

சச்சின் டெண்டுல்கர் நடித்து மே 26-ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் 'சச்சின் எ பில்லியன் ட்ரீம்ஸ்'. இந்தப்படத்தை ஜேம்ஸ் எர்ஸ்கைன் இயக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். இத்திரைப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன் தன்னுடைய முதல் இந்திப் பாடலை பாடியுள்ளார்.  

14 வயது அமீன் பாடிய பாடலான 'மர்த் மராதா' ரசிகர்களின் கவனத்தைப் பரவலாகப் பெற்றுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் தனது டிவிட்டர் பக்கத்தில் அஞ்சலி கெய்க்வாடுடன் அமீன் பாடியது குறித்த செய்தியையும் அப்பாடலை யூ டியூப்பிலும் பகிர்ந்துள்ளார்.

அமீன் இதற்கு முன் இயக்குனர் மணி ரத்னத்தின் ஓகே கண்மணியில் மெளலானா என்ற பாடலையும், ஆங்கிலத்தில் 'கப்பிள்ஸ் ரிட்ரீட்' என்ற பாடலையும், தெலுங்கில் 'நிர்மலா கான்வென்ட்’ என்ற படத்தில் ஒரு பாடலையும் பாடியுள்ள நிலையில் தற்போது இந்தியிலும் பாடியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com