மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நடிகர்கள் சார்பில் குழு!
தமிழகத்தில் கடந்த சில நாள்களாக வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவாரூர்...


தமிழகத்தில் கடந்த சில நாள்களாக வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை பெருமளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வியாழக்கிழமை (நவ.2) மாலை தொடங்கி வெள்ளிக்கிழமை (நவ.3) காலை வரை விடிய விடிய தொடர்ந்து மழை பெய்தது. இதனால் நகரின் பெரும்பாலான இடங்களில் மழை நீர் தேங்கி அதன் அளவு அதிகரித்து பல இடங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இதையடுத்து மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ குழு ஒன்றை நடிகர்கள் அமைத்துள்ளார்கள். நாசர், விஷால், கார்த்தி உள்ளிட்ட நடிகர்கள் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளார்கள். 7904084228, 9710444442, 9444188902 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டால் உதவிகள் செய்யப்படும் என இந்தக் குழுவின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மழையால் பாதிக்கப்பட்டவர்கள் தனது அலுவலகத்தில் உணவு மற்றும் குடிநீரைப் பெற்றுக்கொள்ளுமாறும் விஷால் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக 8939226847, 9884745672 ஆகிய தொலைப்பேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...