மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கமல் பிறந்தநாளன்று விஸ்வரூபம் 2 டிரெய்லர்? இசையமைப்பாளர் ஜிப்ரான் சூசகம்!

விஸ்வரூபம் படம் நான் எதிர்பார்த்ததை விடவும் சீக்கிரமாக வெளிவரப் போகிறது. டிரெய்லர் வேலைகள்...

News image
Updated On :29 ஜனவரி 2024, 6:02 pm

எழில்

கமல் நடித்து இயக்கியுள்ள விஸ்வரூபம் 2 படத்தில் பூஜா குமார், ஆண்டிரியா, ராகுல் போஸ் போன்றோர் நடித்துள்ளார்கள். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளிவரவுள்ளது.

விஸ்வரூபம் படத்துக்குப் பிறகு விஸ்வரூபம் 2 படத்தைத் தொடங்கினார் கமல். ஆனால் அந்தப் படத்தின் பணிகள் முழுமையடையாததால் வேறு படங்களில் நடிக்கத் தொடங்கினார். இந்நிலையில் சிறிது இடைவெளிக்குப் பிறகு விஸ்வரூபம் 2 படத்தின் பணிகளை மீண்டும் தொடங்கினார் கமல். இப்படத்தின் ஹிந்தி, தெலுங்குப் பதிப்புகளுக்கான டப்பிங் பணிகளும் மீண்டும் தொடங்கப்பட்டன.

இந்நிலையில் விஸ்வரூபம் படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதனால் கமல் பிறந்தநாளான நவம்பர் 7 அன்று விஸ்வரூபம் 2 படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இசையமைப்பாளர் ஜிப்ரானும் ஒரு பேட்டியில் இதைச் சூசகமாக உறுதிப்படுத்தியுள்ளார். அவர் கூறியதாவது: 

விஸ்வரூபம் படம் நான் எதிர்பார்த்ததை விடவும் சீக்கிரமாக வெளிவரப் போகிறது. டிரெய்லர் வேலைகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன. டிரெய்லர் மிகச்சிறப்பாக வந்துள்ளது. டிரெய்லருக்குப் பிறகு விஸ்வரூபம் 2 படம் திடீரென வரும் என்று கூறி ஆர்வத்தைத் தூண்டியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.