எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் பறக்கும் படை சோதனை! 15 நிமிடங்கள் நடைபெற்றது!நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் போட்டி!அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

நான் பிறந்த குலத்திலிருந்து விலகி வந்தவன்; என்னை இப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள்: கமல் பேச்சு

என்னை நாத்திகன் என்று அழைப்பதை நான் ஏற்கவில்லை. நான் பகுத்தறிவாளன். சமூகம் பார்த்து நான் என்றும் நட்பு கொள்வது கிடையாது... 

News image
Updated On :7 நவம்பர் 2017, 9:17 am

எழில்

இந்துக்களைப் புண்படுத்த வேண்டும் என்பது என் நோக்கமல்ல. எந்த மதமானாலும் எவரானாலும் வன்முறையில் ஈடுபடக்கூடாது என கமல் பேசியுள்ளார்.

தனது பிறந்தநாளையொட்டி, மையம் விசில் (Miamwhistle) என்கிற நற்பணி மன்ற செயலியை கமல் அறிமுகப்படுத்தியுள்ளார். செயலி அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் கமல் பேசினார். பிறகு செய்தியாளர்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நேர்மையற்றவர்களுக்குக் கட்சியில் இடமில்லை. தகுதியானவர்களை மட்டுமே பயன்படுத்துவேன். கடைநிலை ஊழியர் செய்யும் தவறும் பெரிது. ஊழல் செய்தவர்களைக் கட்சியில் அனுமதிக்க மாட்டேன். 234 தொகுதிகளிலும் தவறு செய்யாதவர்களுக்கே முன்னுரிமை. எனக்கு பின்னால் வருபவர்கள் நேர்மையானவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காக இங்கு வந்துள்ளேன். ஜனவரி மாதத்துக்குப் பிறகு ஒவ்வொரு அறிவிப்பாக வெளிவரும். கொசஸ்தலை ஆறு குறித்த விவாதம் எழுந்துள்ளதை சிறிய முன்னேற்றமாகக் கருதுகிறேன். மக்கள் பிரச்னைகளை பற்றிப் பேச #theditheerpomvaa #maiamwhistle #virtuouscycles #KH என்ற ஹேஷ்டேக்குகளில் பேசலாம்.

இந்துக்கள் குறித்த கருத்தை உண்மையான முறையில் எதிர்கொள்வேன். எந்த மதமானாலும் எவரானாலும் வன்முறையில் ஈடுபடக்கூடாது. இந்துக்களைப் புண்படுத்த வேண்டும் என்பது என் நோக்கமல்ல. எல்லா இந்துக்களும் புரிந்துக் கொள்ளும் வகையில் விமரிசனங்களை வெளிப்படுத்துகிறேன். நான் பிறந்ததும், பாலச்சந்தர் என்னை அறிமுகப்படுத்தியது தவிர பிராமணச் சமூதாயத்தைத் தேடிச் சென்றதில்லை நான் பிறந்த குலத்திலிருந்து விலகி வந்தவன் நான். என்னை இப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள். என்னை நாத்திகன் என்று அழைப்பதை நான் ஏற்கவில்லை. நான் பகுத்தறிவாளன். சமூகம் பார்த்து நான் என்றும் நட்பு கொள்வது கிடையாது. இந்துக்களுக்கு எதிராக கருத்து கூற நினைத்தது கிடையாது. ஆனால் இந்து விரோதி என்றுதான் நான் சித்தரிக்கப்படுகிறேன். இந்துத்துவா தொடர்பாக உண்மையை கூறியதற்குத் தண்டனை அளித்தால் அதனை அனுபவிக்கவும் தயார் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.