ஏமாலி பட டீசர் சர்ச்சை: நடிகை அதுல்யா விளக்கம்!
டீசரைப் பார்த்து அக்கதாபாத்திரத்தைப் பற்றியும், படத்தைப் பற்றியும் தீர்மானிக்காதீர்கள்...


ஏமாலி பட டீசரில் இடம்பெற்ற காட்சிகளுக்கு நடிகை அதுல்யா விளக்கம் அளித்துள்ளார்.
முகவரி படத்தை இயக்கிய துரையின் இயக்கத்தில் வெளிவரவுள்ள புதிய படம் - ஏமாலி. சமுத்திரக்கனி, சாம் ஜோன்ஸ், அதுல்யா ரவி, பால சரவணன், சிங்கம் புலி நடித்துள்ள இப்படத்துக்கு இசை - சாம் டி ராஜ். வசனம் - ஜெயமோகன்.
இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இதில், நடிகை அதுல்யா ஏற்று நடித்துள்ள கதாபாத்திரம் சமூகவலைத்தளங்களில் விவாதங்களை உருவாக்கியது. இதையடுத்து நடிகை அதுல்யா, இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
நேர்மறை உணர்வுகளை உருவாக்கியவர்களுக்கு நன்றி. புரிதலுக்கும் ஆதரவுக்கும் நன்றி. டீசரைப் பார்த்து அக்கதாபாத்திரத்தைப் பற்றியும், படத்தைப் பற்றியும் தீர்மானிக்காதீர்கள். படத்தில் நல்ல கருத்துகளைக் கொண்ட நேர்மறையான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். எதிர்பாராத காட்சிகள் மூலம் சிலரை ஏமாற்றியதற்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். அக்காட்சிகள் படத்தில் இடம்பெறாது. என்னைப் பாராட்டிய சிலருக்கு நன்றி. எனது கதாபாத்திரத்துக்கு நான் நியாயம் செய்துள்ளேன் என்று விளக்கம் அளித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...