முதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் பறக்கும் படை சோதனை! 15 நிமிடங்கள் நடைபெற்றது!நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் போட்டி!அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

ஒளிப்பதிவாளர் ப்ரியன் மரணம்: திரையுலகப் பிரபலங்கள் இரங்கல்!

மறைந்த பிரபல ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திராவிடம் உதவியாளராக இருந்து பணி கற்றவர் ப்ரியன்...

News image
Updated On :10 நவம்பர் 2017, 5:32 am

எழில்

திரைப்பட ஒளிப்பதிவாளர் ப்ரியன் (54) மாரடைப்பால் சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு மனைவி, இரு மகள்கள் உள்ளனர்.

மறைந்த பிரபல ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திராவிடம் உதவியாளராக இருந்து பணி கற்றவர் ப்ரியன். 'பொற்காலம்', 'தேசிய கீதம்', 'வெற்றிக் கொடி கட்டு', 'தெனாலி' உள்ளிட்ட பல திரைப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். 'தமிழ்', 'சாமி', 'கோயில்', 'அருள்', 'அய்யா', 'ஆறு', 'வேல்', 'சேவல்', 'சிங்கம்' போன்ற இயக்குநர் ஹரியின் திரைப் படங்களில் பிரதான ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இதுவரை சுமார் 30 திரைப் படங்களுக்கு ப்ரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கத்தின் துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்தவர் ப்ரியன். ப்ரியனின் இறுதிச் சடங்குகள் அவரின் சொந்த ஊரான விருதுநகரில் வெள்ளிக்கிழமை (நவ.10) நடைபெறுகிறது. 

ப்ரியனின் மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்கள். 

The sudden demise of cinematograher #Priyan Sir is so saddening..A Lovely Human.. He did an Amazing work 4 SAAMY SQUARE & now this shocking news!
May you R.I.P sir. Strength to ur Family

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.