தென்னிந்தியாவின் முன்னணி நாயகியாக வலம் வருபவர் அனுஷ்கா. 2005-ம் ஆண்டு சூப்பர் என்ற தெலுங்குப் படத்தில் அறிமுகமானார். பின்னர் பல கமர்ஷியல் வெற்றிப் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.
இந்நிலையில், 2009-ம் ஆண்டு வெளியான அருந்ததி திரைப்படம் அனுஷ்காவுக்கு திருப்புமுனையாக அமைந்தது. அன்றிலிருந்து முன்னணி கதாநாயகிகள் வரிசையில் இடம்பிடித்தார். மேலும் சிறந்த நடிகை என்ற பெயரும் பெற்றார்.
தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருது, ஃபிலிம்ஃபேர் விருது, நந்தி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். தெலுங்கு, தமிழில் நட்சத்திர நாயகியாக திகழ்கிறார்.
சமீபத்தில் வெளியான பிரமாண்டத் திரைப்படமான பாகுபலியில் நடித்து மீண்டும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதனிடையே நடிகர் பிரபாஸுக்கும் இவருக்குமான நட்பு அனைவரின் கவனத்தையும் பெற்றது.
அதுமட்டுமல்லாமல் இவர்கள் இருவரும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகவும் டோலிவுட் வட்டாரங்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இதனிடையே, நடிகை அனுஷ்கா இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவரை காதலிப்பதாகத் தெரிவித்துள்ளார். அதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
கிரிக்கெட்டைப் பொறுத்தவரையில் ராகுல் டிராவிட் தான் எனது ஃபேவரைட். என்னுடையே இளமைக் காலத்தில் அவர் மீதுதான் முதன்முதலில் எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. பின்னர் நாளடைவில் அது காதலாக மாறியது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உத்தரமேரூரில் 8 சுயேச்சைகள் உள்பட 14 போ் போட்டி!

நாட்டில் ரயில் பாதை இல்லாத ஒரே பேரவைத் தொகுதி திருப்பத்தூர்: அண்ணாமலை குற்றச்சாட்டு

தமிழ், தமிழ்நாடு என்றாலே பாஜகவுக்கு வெறுப்பு : மு.க. ஸ்டாலின்

தமிழகத்தில் 18,000 பாலியல் வழக்குகள் பதிவு: எடப்பாடி பழனிசாமி பிரசாரம்
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு


