சின்னத்திரை ரவுண்ட் அப்... இனிமே இவங்க ரீல் ஜோடி இல்லை ரியல் ஜோடி!

கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி சீரியலில் மட்டுமல்லாது நிஜ வாழ்விலும் திருமண பந்தத்தில் இணைந்திருக்கும் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்கள்!
சின்னத்திரை ரவுண்ட் அப்... இனிமே இவங்க ரீல் ஜோடி இல்லை ரியல் ஜோடி!
Updated on
1 min read

அவந்திகா வெட்ஸ் நட்ராஜ்!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல மெகா சீரியல் தொடர் ‘பிரியமானவள்’. இத்தொடரில் அவந்திகா என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்துக் கொண்டிருக்கும் சிவரஞ்சனியை தொடரைப் பார்ப்பவர்கள் அனைவருக்கும் நன்கு தெரிந்திருக்கும். இந்தத் தொடரைப் பொருத்தவரை இது சற்று வித்யாசமான கதாபாத்திரமே! ஏனெனில் அவந்திகாவாக வரும் சிவரஞ்சனி தொடரில் தன் கணவராக வரும் கதாபாத்திரத்தை வா, போ என ஒருமையில் தான் அழைப்பது வழக்கம். அதே சமயம் அவந்திகாவின் கணவராக வரும் நட்ராஜ் கதாபாத்திரம் மனைவி அவந்திகாவை வாங்க, போங்க என்று மிகுந்த மரியாதையுடன் அழைப்பதாக அந்தத் தொடரின் கதை அமைந்துள்ளது.

இப்போது சுவாரஸ்யம் என்னவென்றால் ரீல் ஜோடிகளாகச் சின்னத்திரையில் வழக்கமான கணவன், மனைவி சம்பாஷணைகளையே உல்ட்டாவாக மாற்றி கணவனைப் போல மனைவி ஒருமையிலும், மனைவியைப் போல கணவன் மரியாதைப் பன்மையிலும் உரையாடுவதாக இவ்விருவரும் இதுவரை அந்தத் தொடரில் நடித்துக் கொண்டிருந்தார்கள். தற்போது இவ்விருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. ரீல் வாழ்வில் மட்டுமல்லாது ரியல் வாழ்விலும் இணைந்திருக்கும் இந்த ஜோடி சின்னத்திரை உரையாடல் வழக்கத்தைத் தான் ரியல் வாழ்விலும் பிரதிபலிப்பார்களா என்று அவர்களது ரசிகர்களிடையே சுவாரஸ்யமான கேலி இழையோடிக் கொண்டிருக்கிறது.

கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி சீரியலில் மட்டுமல்லாது நிஜ வாழ்விலும் திருமண பந்தத்தில் இணைந்திருக்கும் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com