எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

ஏ.ஆர்.ரஹ்மானின் YM ஸ்டுடியோவில் நடைபெறும் 2.0-வின் இறுதி கட்டப் படப்பிடிப்பு!

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும்  '2.0' பாடல் காட்சியின் படப்பிடிப்பு நாளை

News image
Updated On :12 அக்டோபர் 2017, 10:03 am

DIN

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும்  '2.0' பாடல் காட்சியின் படப்பிடிப்பு நாளை தொடங்குகிறது. 2018-ம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று இயக்குனர் ஷங்கரின் 2.0 ஆகும். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கடைசிப் பாடலின் படமாக்கம் நாளை முதல் தொடங்குகிறது.

Story image

இந்தப் படப்பிடிப்பு முதன் முறையாக ஏ.ஆர். ரஹ்மானின் 'YM Studios'வில் நடைபெறுகிறது. அதி நவீனமாக கட்டப்பட்டுள்ள இந்த ஸ்டூடியோ முழுவதும் தயாராக இன்னும் சில தினங்கள் உள்ளது. நான்கு அல்லது ஐந்து நாட்களில் இப்பாடல் படப்பிடிப்பு முடிந்த பின்னர் அதைத் தொடர முடிவு செய்துள்ளனர். ரெட் ஹில்ஸ் அருகேயுள்ள இந்த YM Studios ஸ்டூடியோவில் நடைபெறும் முதல் படப்பிடிப்பு இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. 2.0-வின் கடைசிப் பாடல் காட்சியான இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் எமி ஜாக்சன் கலந்து கொள்கிறார்கள். 

Story image

ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்ஷய் குமார், சுந்தன்ஷு பாண்டே மற்றும் அடில் ஹுசைன் நடித்துள்ள இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் அக்டோபர் 21 அல்லது 22-ம் தேதிக்குள் முடிவடைந்து விடும். அக்டோபர் 27-ம் தேதி லைகா புரொடக்ஷன்ஸ் 2.0-வின் ஆடியோவை துபாயில் வெளியிடத் திட்டமிட்டுள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.