யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ஹார்வர்ட் தமிழ் இருக்கை: ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துடன் ஜி.வி. பிரகாஷ் நேரில் சந்திப்பு

ஹார்வர்ட் தமிழ் இருக்கை தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்...

News image
Updated On :12 அக்டோபர் 2017, 10:02 am

எழில்

ஹார்வர்ட் தமிழ் இருக்கை தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தை நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.  

இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் கூறியதாவது: லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்திய தமிழரோடு இனிய சந்திப்பு ஹார்வேர்டு தமிழ் இருக்கைக்காக ஒன்றாக இணைவதில் பெருமை என்று கூறியுள்ளார். 

உலகின் பழைமையான மொழிகளுக்கெல்லாம் ஹார்வர்டில் தனித் துறை உள்ளது. ஆனால், தமிழ் மொழிக்கு இல்லை. தமிழுக்குத் தனித்துறையைத் தொடங்க வேண்டும் என்றால் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துக்கு ரூ.42 கோடி வழங்க வேண்டும். உலக அளவில் பெயர் பெற்ற ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழுக்கான இருக்கை அமைக்க கடந்த 20 ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், தற்போது அனுமதி கிடைத்துள்ளது.

ரூ. 42 கோடியில்,  ரூ. 21 கோடியை உலகில் உள்ள பல்வேறு தமிழ் அமைப்புகளும் அமெரிக்கவாழ் தமிழ் மக்களும் தந்து உதவியுள்ளார்கள். மீதமுள்ள ரூ. 21 கோடியை வரும் 2018-ம் ஆண்டு ஜூன் மாதத்துக்குள் செலுத்த வேண்டும் என ‘ஹார்வர்ட் தமிழ் இருக்கை’ அமைப்பின் தலைவரும், அமெரிக்கவாழ் தமிழருமான மருத்துவர் ஜானகிராமன் சமீபத்தில் தெரிவித்தார். 

இதுகுறித்த கூட்டம் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஜி.வி. பிரகாஷ், தமிழ் இருக்கை அமைய தனது தனிப்பட்ட நன்கொடையைக் காசோலையாக அளித்தார். மேலும், ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்காக ஒரு பாடலை இசையமைத்து கோவை பிஎஸ்ஜி கல்லூரி மாணவர் ஆதி ராஜாவுடன் பாடலைப் பாடியுள்ளார் ஜி.வி. பிரகாஷ். இந்நிலையில் ஹார்வர்ட் தமிழ் இருக்கை தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.