மருத்துவ முத்தம் பற்றி மீண்டும் பதில் சொன்னார் ஓவியா!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் ஓவியா. மனதில் பட்டவற்றை
மருத்துவ முத்தம் பற்றி மீண்டும் பதில் சொன்னார் ஓவியா!
Updated on
2 min read

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் ஓவியா. மனதில் பட்டவற்றை ஒளிவு மறைவில்லாமல் பேசுவது, முகம் கொள்ளாச் சிரிப்புடன் சீரியஸான விஷயங்களையும் ஜாலியாக எடுத்துக் கொள்வது ஓவியாவின் தனித்துவம். அழகும் துள்ளலும் உள்ள ஓவியா தற்போது புதிய சினிமா வாய்ப்புக்களை கவனமாக தேர்ந்தெடுத்து நடிக்கிறார். சமீபத்தில் ஓவியாவின் பிரஸ் மீட் ஒன்று ரசிக்கத்தக்க வகையில் இருந்தது. கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு ஓவியா பளிச் பளிச்சென்று பதில் கூறினார். அதிலிருந்து சில துளிகள்: 

பிக் பாஸுக்குப் பிறகு உங்களுக்கு நல்ல பெயர், புகழ் கிடைச்சிருக்கு. நிறைய படம் புக் ஆகியிருக்கீங்களா? 

பிக்பாஸுக்கு முன்னாடி எனக்கு சினிமா வாய்ப்புகள் ரொம்ப கம்மியா இருந்துச்சு. ஆனா, இப்போ நிறைய சான்ஸஸ் வருது.  பட், இவ்ளோ சான்ஸஸ் வருதுனு எல்லாப் படத்துலயும் நான் நடிக்க விரும்பல. எனக்குப் பிடிச்ச படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து பண்றதுன்னு தெளிவா இருக்கேன். இப்போதைக்கு  `காஞ்சனா 3’ மட்டும்தான் பண்றேன்.

உங்களுக்கு போட்டியாளராக யாரை நினைப்பீர்கள்?

அப்படி எல்லாம் நான் நினைக்கறது இல்லை. எனக்கு யார் கூடவும் காம்படிஷன் கிடையாது. 

ரஜினி கமல் யாரை மிகவும் பிடிக்கும்?

ரஜினி கமல் ரெண்டு பேருக்குமே நான் பெரிய ஃபேன். பிக் பாஸ் நிகழ்ச்சில கலந்துக்கிட்டதால கமல் சார் பற்றி ஐடியா இருக்கு. ஆஸ் எ பெர்சனா எனக்கு அவரை பிடிக்கும். சனி, ஞாயிறு எப்போ வரும்னு வெயிட் பண்ணுவேன். டென்ஷன்ல இருந்த சமயத்துல யாராவது நம்மகிட்ட பேசினா நல்லாயிருக்கும்னு தோணும். அப்ப அவரைப் பார்த்தாலே ரொம்ப ஹாப்பியா ஃபீல் பண்ணுவேன். அவர் இப்போ அரசியல் விஷயங்கள்ல தீவிரமா இருக்காங்க. ஏதாவது ஹெல்புக்கு கூப்பிட்டால் நிச்சயம் பண்ணுவேன்.

அரசியல்ல ஈடுபட்டா உங்களுக்கு என்ன பதவி வேணும்னு நினைப்பீங்க?

போஸ்ட் எதுவும் வேண்டாம். இப்போதைக்கு அந்த ஐடியா இல்லை. இப்போதைக்கு மூவிஸ் மட்டும் தான்.  

அப்படி ஒரு வாய்ப்பு உங்களைத் தேடி வந்தா என்னவா இருப்பீங்க?

எனக்கு ராஜாவாக இருக்க பிடிக்காது மந்திரி தான் பிடிக்கும்

ஆரவ் தந்த மருத்துவ முத்தம்.... என்ன தான் அது?

என்ன அது? ம்ம்ம்... மருத்துவத்துக்காக கொடுக்கப்பட்ட ஒரு முத்தமாக இருந்துட்டுப் போகட்டும்... அவ்வளவுதான்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com