மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

நாள்தோறும் வெளியாகும் 2.0 படத்தின் புதிய போஸ்டர்கள்!

2.0 படத்தின் விளம்பர வேலைகள் தொடங்கிவிட்டன. நாளை இசைவெளியீடு என்பதால்...

News image
Updated On :26 அக்டோபர் 2017, 7:01 am

ரஜினி - ஷங்கர் கூட்டணியில் வெளிவரும் 2.0 படத்தின் விளம்பர வேலைகள் தொடங்கிவிட்டன. நாளை இசைவெளியீடு என்பதால் அனுதினமும் படத்தின் புதிய போஸ்டர்கள் வெளியிடப்படுகின்றன.

2.O (எந்திரன் படத்தின் 2-ம் பாகம்) படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துவருகிறது. பட்ஜெட் - ரூ. 400 கோடி. ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடிக்கிறார். கதாநாயகி - ஏமி ஜாக்சன். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார். வசனம் - ஜெயமோகன். ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா-வும் முத்துராஜ் கலை இயக்குநராகவும் படத் தொகுப்பாளராக ஆண்டனியும் ஒலி வடிவமைப்பாளராக ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டியும் பணியாற்றுகிறார்கள். 3டி தொழில்நுட்பத்தில் 2.0 படம் உருவாகிவருவதால் இதன் கிராபிக்ஸ் பணிகள் அமெரிக்காவில் தற்போது நடைபெற்று வருகின்றன. 2.0, ஜனவரி மாதம் 25 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை துபையில் 2.0 பாடல்கள் வெளியிடப்படவுள்ளன. ரஜினி, ஷங்கர், ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட படக்குழுவினர் இந்த விழாவில் கலந்துகொள்ளவுள்ளார்கள்.

இயக்குநர் ஷங்கரின் ட்விட்டர் பக்கத்தில் மூன்று புதிய போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன. நாளை இசை வெளியீடு என்பதால் மேலும் ஒரு போஸ்டர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.