சென்னை: அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் அமையவுள்ள தமிழ் இருக்கைக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.
அமெரிக்க நாட்டின் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் உலகின் செம்மொழிகளான 7 மொழிகளில் தமிழை தவிர மற்ற 6 செம்மொழிகளுக்கும் இருக்கைகள் உள்ளன. எனவே தமிழுக்காக சங்கத்தமிழ் இருக்கை ஒன்றை நிறுவும் முயற்சியில் அமெரிக்காவில் வாழும் டாக்டர்கள் ஜானகிராமன், சம்பந்தம் ஆகிய இருவரும் களம் இறங்கினர்.
அங்கு தமிழ் இருக்கை நிறுவுவதற்கான அனுமதி பெறுவதற்கு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.40 கோடி தேவையாகும்.இதில் ரூ.6 கோடியே 70 லட்சத்தை டாக்டர்கள் ஜானகிராமன், சம்பந்தம் ஆகிய 2 பேரும் வழங்கியுள்ளனர். மீதமுள்ள ரூ.33 கோடிக்கு அதிகமான நிதியை உலக தமிழர்களிடம் நன்கொடையாக திரட்டி வழங்க அவர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
நேற்று முன்தினம் இந்த முயற்சிக்கு தமிழக அரசு தன் பங்காக 10 கோடி ரூபாய் வழங்கி உள்ளது. தற்போது நடிகர் சங்கத்தின் செயலாளரும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.
இதுதொடர்பாக விஷால் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
‘380 ஆண்டுகளாக இயங்கி வரும் உலகின் சிறந்த பல்கலைக்கழகமான ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்காக ஓர் இருக்கை அமைய அமெரிக்க வாழ் தமிழர்களான மருத்துவர்கள் சம்பந்தமும் ஜானகிராமனும் தீவிர முயற்சி எடுத்து வருகிறார்கள். அவர்களுக்கு எனது பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழுக்கு அங்கே ஓர் இருக்கை அமைக்க சுமார் 40 கோடி ரூபாய் தேவைப்படும் நிலையில் இதுவரை சுமார் 17 கோடி ரூபாய் தான் சேர்ந்துள்ளது. தமிழக அரசு சார்பில் 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதற்கு நன்றிகள்! எனது சார்பில் 10 லட்சம் ரூபாய் செலுத்துகிறேன்.
உலகளாவிய தமிழர்கள் ஒன்றுபட்டு இதற்கான நிதி விரைவில் சேர உதவ வேண்டும் என்றும் மத்திய அரசும் இந்த வரலாற்று சிறப்புக்கு உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!

கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்பாடு, பட்டாசு வெடிப்பதற்கு புதிய சட்ட முன்வரைவு தேவை!

மாங்குடி மருதனாா் நினைவுத் தூணுக்கு மரியாதை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


