டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ஆறாவது தடவையாக விஜய் சேதுபதியுடன் ஜோடி சேரும் காயத்ரி!

ஆரண்ய காண்டத்துக்குப் பிறகு பலவருட இடைவெளிக்குப் பிறகு அநீதிக் கதைகள் மூலம்

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:47 pm

DIN

ஆரண்ய காண்டத்துக்குப் பிறகு சில வருட இடைவெளிக்குப் பிறகு, 'அநீதிக் கதைகள்' மூலம் மீண்டும் களத்தில் இறங்கியுள்ளார் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா. 'அநீதிக்கதைகள்' படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, பஹத் பாசில், ஆகியோர் நடிக்கிறார்கள். வினோத் ஒளிப்பதிவு செய்துவரும் இந்தப் படத்தில் காயத்ரி சமீபத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்', 'ரம்மி', 'புரியாத புதிர்' ஆகிய படங்களில் விஜய் சேதுபதியுடன் நடித்துள்ளார் காயத்ரி. தற்போது, 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்', 'சீதக்காதி' ஆகிய படங்களிலும் விஜய் சேதுபதியுடன் நடித்து வருகிறார். விஜய் சேதுபதியுடன் அதிகமான முறை நடித்துள்ள நடிகை காயத்ரிதான். இந்தப்படத்தில் சில காட்சிகளில் விஜய் சேதுபதி பெண் வேடமிட்டு நடித்துள்ளாராம்.

தியாகராஜன் குமாரராஜாவின் அநீதிக்கதைகளை அவரது ரசிகர்கள் மட்டுமல்ல, திரைத்துறையினரும் கூட இப்படத்தை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறார்கள் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.