சென்னை: சண்டை ஒன்றில் தனது பக்கத்து வீட்டுப் பெண்ணை கடித்ததாக எழுந்துள்ள புகார்களுக்கு நகைச்சுவை நடிகை மதுமிதா விடியோ ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார்.
பல தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளவர் நடிகை மதுமிதா. நேற்று முன்தினம் இவர் தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பிரச்சனைகளின் காரணமாக, சண்டையில் பக்கத்து வீட்டு பெண்ணை இவர் கடித்து விட்டதாக தகவல் வெளியானது.
இது தொடர்பாக காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகை மதுமிதா நேற்று விடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தான் வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்பில் பராமரிப்பு கட்டண குளறுபடி காரணமாக, அண்டை வீட்டுக்காரரான உஷா என்பவருடன் தனக்கு உண்டான பிரச்சினை பற்றியும், அதன் பின் நடந்துள்ள சம்பவங்களையும் எடுத்துரைத்துள்ளார்.
நடிகை ஒருவருக்கு ஏற்பட்டுள்ள இந்த பிரச்சினையானது, அண்டை அயலாரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இது தொடர்பாக கோயம்பேடு காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விடியோ இணைப்பு:
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

”இந்த தொண்டையோடு எப்புடிடா?” சீமானை பாடச் சொன்ன தொண்டர்கள்! | NTK

தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்
டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பந்துவீச்சு!

எடப்பாடியின் அரசியல் அனுபவம்: உதயநிதி விமர்சனம்!
வீடியோக்கள்

தில்லியைக் காப்பாற்றி வரும் சமீர் ரிஸ்வி! | Sameer Rizvi |
தினமணி செய்திச் சேவை

”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK
தினமணி செய்திச் சேவை

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு


