மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

துபையில் வெளியிடப்படும் 2.0 பாடல்கள்! நவம்பரில் டீசர்! டிசம்பரில் டிரெய்லர்!

லைகா நிறுவனத்தின் ராஜூ மகாலிங்கம் ட்விட்டரில் 2.0 குறித்த புதிய தகவல்களை வெளியிட்டார்...

News image
Updated On :7 செப்டம்பர் 2017, 9:10 am

2.0 படத்தின் முக்கியமான அறிவிப்புகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. 

லைகா நிறுவனத்தின் ராஜூ மகாலிங்கம் ட்விட்டரில் 2.0 குறித்த புதிய தகவல்களை வெளியிட்டார். அவர் கூறியதாவது: திருவிழா தொடங்கவுள்ளது. 2.0 படத்தின் பாடல்கள் அக்டோபர் மாதம் துபையில் வெளியிடப்படுகின்றன. நவம்பரில் ஹைதராபாத்தில் டீசர், டிசம்பரில் சிங்கார சென்னையில் டிரெய்லர் வெளியீடு என்று கூறியுள்ளார். இத்தகவல்கள் ரஜினி ரசிகர்களை மிகவும் குஷிப்படுத்தியுள்ளது. 2.0, ஜனவரி மாதம் 25 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் 2.O (எந்திரன் படத்தின் 2-ம் பாகம்) படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துவருகிறது. பட்ஜெட் - ரூ. 400 கோடி. ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடிக்கிறார். கதாநாயகி - ஏமி ஜாக்சன். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார். வசனம் - ஜெயமோகன். ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா-வும் முத்துராஜ் கலை இயக்குநராகவும் படத் தொகுப்பாளராக ஆண்டனியும் ஒலி வடிவமைப்பாளராக ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டியும் பணியாற்றுகிறார்கள்.

2.0 படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது. 3டி தொழில்நுட்பத்தில் உருவாகிவருவதால் இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகள் அமெரிக்காவில் தற்போது நடைபெற்று வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.