சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ஜாதியை ஒழிக்காதவரை தமிழ்த் தேசியம் எட்டாக்கனிதான்: அனிதாவுக்கான அஞ்சலி நிகழ்ச்சியில் பா. இரஞ்சித் - அமீர் கருத்து மோதல்! 

தமிழ், தமிழன் என்று இன்னும் எத்தனை நாள் பேசிக்கொண்டிருக்கப் போகிறீர்கள்? ஒவ்வொரு தெருவிலும் சாதி உள்ளது...

News image
Updated On :8 செப்டம்பர் 2017, 9:12 am

எழில்

சென்னை வடபழனி ஆர்கேவி ஸ்டூடியோவில் இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் சார்பில் அரியலூர் மாணவி அனிதாவுக்கான அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் இயக்குநர் அமீர் பேசியதாவது: நாம் அனைவரும் இங்கு அனிதாவுக்காகக் கூடியிருக்கிறோம். சாதிகளைக் கடந்து சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.  நாம் தமிழனாகச் சமத்துவம் அடைந்துள்ளோம் என்றார். 

அமீரின் இப்பேச்சுக்கு பா. இரஞ்சித் எதிர்ப்பு தெரிவித்து மேடையிலேயே அவருடன் கருத்து மோதலில் ஈடுபட்டார். அதன்பிறகு பா. இரஞ்சித் பேசியதாவது:  

இன்னும் எத்தனை நாள் சமூக நீதியற்ற சமூகமாக இருக்கப் போகிறோம்? தமிழனாக இருந்து நான் சொல்கிறேன் - தமிழ்த் தேசியம் எட்டாக்கனிதான். சாதியாகப் பிரிந்திருக்கும் வரை சாதியாகப் பிரிந்திருக்கும் வரை உன்னால் தமிழ்த் தேசியத்தைத் தொடமுடியாது. 

தமிழ், தமிழன் என்று இன்னும் எத்தனை நாள் பேசிக்கொண்டிருக்கப் போகிறீர்கள்? ஒவ்வொரு தெருவிலும் சாதி உள்ளது. தமிழன் சாதியால் பிரிந்துள்ளான். ஒப்புக்கொள்ளுங்கள். அனிதாவின் மரணத்திலாவது நாம் நம்மை சுயபரிசோதனை செய்துகொள்ளவேண்டும் என்று ஆவேசமாகப் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.