சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

துருவ நட்சத்திரம் படக்குழுவினர் துருக்கி எல்லையில் சிக்கினர்!

கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘துருவ நட்சத்திரம்’.

News image
Updated On :10 செப்டம்பர் 2017, 12:01 pm

DIN

கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘துருவ நட்சத்திரம்’. விக்ரம், ரீத்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா சரத்குமார், சிம்ரன், டிடி உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்தைக் கெளதம் மேனின் 'ஒன்றாக என்டர்டெயின்மண்ட்' மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது. இதன் படப்பிடிப்பு நியூயார்க் நகரில் தொடங்கியது. அதன் பின்னர் குன்னூர், பல்கேரியா, ஜார்ஜியா போன்ற ஐரோப்பிய நாடுகள் மற்றும் அபுதாபி உள்ளிட்ட வெவ்வேறு இடங்களிலும் நடைபெற்றது. இந்தபடத்தின் முக்கியமானக் காட்சிகளைப் படமாக்க துருக்கி செல்வதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர். இதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஜார்ஜியாவிலிருந்து துருக்கியின் இஸ்தான்புலுக்குச் செல்கையில் படக்குழுவினர் துருக்கி எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். செய்தி அறிந்த கௌதம் மேனன் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியது, 'துருக்கி எல்லையில் அனுமதி கிடைக்காமல் கடந்த 24 மணி நேரமாக எங்கள் படக்குழுவினர் காக்க வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களிடம் உரிய ஆவணங்கள் இருந்தும் அங்கு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.  உயர் அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்தப் பதிவை படிக்கும் யாரேனும் அவர்களுக்கு உதவி செய்யுங்கள்’ என்று பகிர்ந்திருந்தார். அதற்கு அடுத்த டிவிட்டரில் உங்கள் அழகான தேசத்தில் படப்பிடிப்பை நடத்த விரும்பி வந்துள்ளோம். இதைப் படிக்கும் யாருக்கேனும் அது நடக்கவேண்டும் என்று தோன்றினால், உடனடியாக எங்கள் படக்குழுவினருக்கு உதவுங்கள்’ என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.