பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பேன் - ராணி முகர்ஜி!

திருமணமானதும் நடிக்க மாட்டேன் என அறிவித்து, குழந்தைப் பிறந்த பின் மீண்டும் நடிக்கத் திரும்பும்
பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பேன் - ராணி முகர்ஜி!
Updated on
1 min read

திருமணமானதும் நடிக்க மாட்டேன் என அறிவித்து, குழந்தைப் பிறந்த பின் மீண்டும் நடிக்கத் திரும்பும் நடிகைகள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். கோலிவுட்டில் ஜோதிகாவின் ரீ என்ட்ரி அனைவருமே எதிர்பார்த்த ஒன்று. தனக்கு ஏற்றாற் போன்ற கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து மீண்டும் வெற்றி வாகை சூடி வருகிறார் ஜோ. இப்படி ரசிகர்கள் மனத்தில் சில நடிகைகள் என்றென்றும் நீங்கா இடத்தைப் பிடித்துவிடுவார்கள். ஜோதிகாவைப் போலவே, பாலிவுட்டில் சமீபத்தில் அத்தகைய ரீ என்ட்ரி ராணி முகர்ஜி. ஹே ராம் படத்தில் நீ பார்த்த பார்வை ஒரு நன்றி பாடலை தமிழ் திரைப்பட ரசிகர்கள் மறந்திருக்க முடியாது. .

திருமண வாழ்க்கை, குழந்தைப் பேறு என சந்தோஷமாக செட்டில் ஆன ராணி முகர்ஜி, 2014-ல் வெளிவந்த மர்தாணி படத்துக்குப் பின் படங்களில் நடிக்கவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பின் தற்போது யஷ் ராஜ் பிலிம்ஸ் பேனரில் மணீஷ் ஷர்மா தயாரிப்பில் சித்தார்த் பி மல்ஹோத்ராவின் இயக்கத்தில் ஹிச்கி (Hichki) என்ற படத்தில் நடிக்கிறார். பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரமாக அப்படம் இருக்கவே மீண்டும் நடிக்க முடிவு செய்துள்ளாராம் ராணி.

இப்படத்தைப் பற்றி ராணி கூறுவது, ‘நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு பலவீனம் இருக்கும். அது நம்மை இயலாமைக்குள் தள்ளி ஓரேடியாக நம்மை வீழ்த்தப் பார்க்கும். அதற்குக் காரணம் சூழலாக இருக்கலாம் இல்லை வேறு ஏதாவது தற்காலிகமான பின்னடைவாக இருக்கலாம். ஆனால் அதையெல்லாம் மீறி நிச்சயம் நம்மால் வெற்றியாளராக மாற முடியும் என்ற பாசிட்டிவ் விஷயத்தை உள்ளடக்கிய படம் இது. கதை பிடித்துவிட்டதால் உடனே நடிக்க சம்மதித்தேன். ஏப்ரல் மாதம் தொடங்கிய படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது’ என்றார் ராணி முகர்ஜி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com