கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!இங்கிலாந்துக்கு எதிராக ரன் குவிக்க நியூஸி. திணறல் - 160 ரன்கள் இலக்கு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கலகலப்பு - 2 படத்திற்கான அறிவிப்பு வெளியானது! 

பிரபல இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் 2012-ஆம் வெளியான கலகலப்பு திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 5:43 pm

DIN

சென்னை: பிரபல இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் 2012-ஆம் வெளியான கலகலப்பு திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த 2012-ஆம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் கலகலப்பு. இந்தப் படத்தில் விமல், மிர்ச்சி சிவா, அஞ்சலி, ஓவியா மற்றும் சந்தானம் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

தற்பொழுது `சங்கமித்ரா' என்னும் பிரமாண்ட வரலாற்றுப் படத்தை சுந்தர்.சி இயக்கவிருந்த நிலையில், நடிகை சுருதி ஹாசன் படத்தில் இருந்து வெளியேறியதால் படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த இடைப்பட்ட நேரத்தில் `கலகலப்பு' படத்தின் அடுத்த பாகத்திற்கான கதையை சுந்தர்.சி எழுதியிருக்கிறார்.

அத்துடன் படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர், நடிகையர் தேர்வும் தற்பொழுது நிறைவு பெற்றுள்ளது. அதன்படி `கலகலப்பு-2' படத்தில் ஜீவா, ஜெய், கேத்தரின் தெரசா, நிக்கி கல்ராணி முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். இந்த படத்தை சுந்தர்.சி-யின் சொந்த தயாரிப்பு நிறுவனமான அவ்னி மூவிஸே தயாரிக்கிறது. `கலகலப்பு-2' படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் தொடங்க இருக்கிறது.

இந்த தகவல்களை இயக்குனர் சுந்தர்.சியின் மனைவியும் பிரபல நடிகையுமான நடிகை குஷ்பு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.