47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

இவ்வளவு ரசிகர்கள் அன்பு செலுத்தும்போது நான் ஒருவரை மட்டும் ஏன் காதலிக்க வேண்டும்? நடிகை ஓவியா உருக்கம்!

பிக் பாஸ் 100-வது நாள் நிகழ்ச்சியில் நான் பங்கேற்பேன். அப்போது ரசிகர்களை மீண்டும் சந்திப்பேன்...

News image
Updated On :25 செப்டம்பர் 2017, 7:42 am

எழில்

சென்னை சோழிங்கநல்லூரில் சரவணா ஸ்டோர்ஸின் புதிய ஃபேமிலி ஷாப்பிங் மால் இன்று தொடங்கப்பட்டது. இதன் தொடக்க விழாவில் பிக் பாஸ் மூலம் அதிகக் கவனம் பெற்றுள்ள நடிகை ஓவியா கலந்துகொண்டார். 

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பிறகு ஓவியா கலந்துகொள்ளும் முதல் நிகழ்ச்சி என்பதால் ஓவியாவை நேரில் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டார்கள்.

இந்த நிகழ்ச்சியில் ஓவியா பேசியபோது: எனக்காகக் காத்திருந்த ரசிகர்களுக்கு நன்றி. என் மீது இத்தனை ரசிகர்கள் அன்பு செலுத்தும்போது நான் ஏன் ஒருவரை மட்டும் காதலிக்கவேண்டும்? பிக் பாஸ் 100-வது நாள் நிகழ்ச்சியில் நான் பங்கேற்பேன். அப்போது ரசிகர்களை மீண்டும் சந்திப்பேன் என்றார். பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் பாடிய கொக்கு நெட்ட கொக்கு நெட்ட பாடலை இந்த நிகழ்ச்சியிலும் ரசிகர்களுக்காகப் பாடிக் காண்பித்து அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களின் அதிக வரவேற்பைப் பெற்றவர் நடிகை ஓவியா. அவருடைய குணாதிசயங்களுக்கும் துணிச்சலான பேச்சுக்கும் அதிகப் பாராட்டுகள் கிடைத்தன. சமூகவலைத்தளங்களில் சேவ் ஓவியா, ஓவியா ஆர்மி போன்ற ஹேஷ்டேக்குகள் பிரபலமாகின. தமிழ்த் திரையுலகினரும் சமூகவலைத்தளம் வழியாக ஓவியாவுக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்தார்கள். இதனால் ஓவியாவுக்குத் திரையுலகிலும் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. பெரிய படங்களில் அவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

ஜவுளிக்கடை திறப்பு விழாவில் பங்கேற்ற ஓவியாவின் இந்தப் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.