ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

விஜய் யேசுதாஸுக்காக தனுஷ் பாடிய பாடல்!

இயக்குநர் மணிரத்னத்தின் உதவியாளர் தனா இயக்கி வரும் திரைப்படம் படைவீரன்.

News image
Updated On :26 செப்டம்பர் 2017, 11:28 am

DIN

இயக்குனர் மணிரத்னத்தின் உதவியாளர் தனா இயக்கி வரும் திரைப்படம் படைவீரன். எவோக் பிக்சர்ஸ் தயாரிப்பில் மதிவாணன் தயாரித்து வரும் இப்படத்துக்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு கார்த்திக்ராஜா இசையமைத்துள்ளார். படத்திற்கு ராஜவேல் மோகன் ஒளிப்பதிவாளராகவும் புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பாளராகவும் பணி புரிந்து வருகின்றனர். பிரபல பாடகரான விஜய் யேசுதாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார்.

படை வீரன் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் இறுதி கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் கவிஞர் பிரியனின் அழகான வரிகளில் இப்படத்தில் தனுஷ் ஒரு பாடலைப் பாடியுள்ளார்.  

Story image

படைவீரன் படக்குழுவினர் தனுஷுக்கு டிவிட்டரில் நன்றி கூறியுள்ளனர். 'லோக்கல் சரக்கா ஃபாரின் சரக்கா’ எனத் தொடங்கும் அந்தப் பாடல் ஒரு ஜாலியான மதுரை மண் சார்ந்த நாட்டுப்புறப் பாடல். இதற்கு முன் பாலாஜி மோகனின் இயக்கத்தில் மாரி படத்தில் விஜய் யேசுதாஸும் தனுஷும் நடித்துள்ளனர், மேலும் ஒரு பின்னணிப் பாடகர் நடிக்கும் படத்திற்கு ஒரு பிரபல நடிகர் பாடல் பாடுவது குறிப்பிடத்தக்கது. இப்பாடலுக்கான படப்பிடிப்பு விரைவில் நடைபெறும் என்றனர் படக்குழுவினர். 

பாரதிராஜா வில்லனாக நடிக்கும் இப்படத்தில் அகில், அமிர்தா ஐயர், மனோஜ்குமார், கவிதாபாரதி,  நிதிஷ் வீரா, கலையரசன், சுரேஷ் ஏகா, சாரா ஜோசஃப், கன்யா பாரதி ஆகியோர் நடிக்கிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.