
பே வாட்ச் என்கிற ஹாலிவுட் படம் மற்றும் குவாண்டிகோ என்கிற ஆங்கில தொலைக்காட்சித் தொடர் போன்றவற்றில் நடித்து சர்வதேச நடிகையாக உயர்ந்துள்ள பாலிவுட் நட்சத்திரம் பிரியங்கா சோப்ரா, அதிக வருமானம் ஈட்டிய தொலைக்காட்சி நடிகைகளில் ஒருவராகக் குறிப்பிடப்பட்டுள்ளார்.
ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள சமீபத்திய பட்டியலில், உலகளவில் அதிக வருமானம் ஈட்டிய தொலைக்காட்சி நடிகைகளில், பிரியங்கா சோப்ராவுக்கு 8-வது இடம் கிடைத்துள்ளது.
ஜூன் 1, 2016 முதல் ஜூன் 1, 2017 வரையிலான காலக்கட்டத்தில் பிரியங்கா சோப்ரா, ரூ. 65 கோடி வருமானம் ஈட்டியுள்ளார். மாடர்ன் ஃபேமிலி நட்சத்திரம் சோஃபியா வெர்கரா ரூ. 271 கோடி வருமானத்துடன் முதலிடத்தில் உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.