/

துல்கர் சல்மானின் புது கெட்டப்! ஜெமினி கணேசனாக ‘மகாநதி’ படப்பிடிப்பில் அசத்துகிறார்!

நாக் அஸ்வின் இயக்கத்தில் துல்கர் சல்மான் கீர்த்தி, சுரேஷ் நடிக்கும் ‘மகாநதி’ இந்த ஆண்டின் பெரும் எதிர்ப்பார்ப்பை உருவாக்கியிருக்கும் படம்.

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 3:32 pm IST

நாக் அஸ்வின் இயக்கத்தில் துல்கர் சல்மான் கீர்த்தி, சுரேஷ் நடிக்கும் ‘மகாநதி’ இந்த ஆண்டின் பெரும் எதிர்ப்பார்ப்பை உருவாக்கியிருக்கும் ஒரு படம் எனலாம். இத்திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் படமாக்கம் செய்யப்பட்டு வருகிறது. துல்கருக்கு இது முதல் தெலுங்குப் படம். நடிகையர் திலகம் என ரசிகர்களால் கொண்டாடப்படும் சாவித்ரியின் வாழ்க்கை சித்திரத்தை பிரதிபலிக்கும் பயோ பிக் வகையான இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் சாவித்ரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Story image

ரசிகர்களால் என்றென்றும் மறக்க முடியாத காதல் மன்னன் ஜெமினி கணேசன் பாத்திரத்தில் துல்கர் நடிப்பது அனைவரும் அறிந்ததே. தற்போது துல்கர் இப்பாத்திரத்துக்காக தனது தோற்றத்தை முற்றிலும் மாற்றிக் கொண்டுள்ளார். இக்கதாபாத்திரத்துக்காக தன் தாடி மீசையை எடுத்துவிட்டு, தற்போது ஜெமினியைப் போல மிகவும் மெல்லிசாக மீசை வைத்துள்ளார். அவரது இந்தப் புதிய மேக் ஓவர் மிகவும் பாந்தமாக இருப்பதாக அனைவரும் பாராட்டினர்.

இத்திரைப்படத்தில் சமந்தா பத்திரிகையாளராக நடிக்கிறார். அவருடைய பார்வையிலிருந்து கதை சொல்லப்படுகிறது. இந்தப் படத்துக்காக பிரம்மாண்டமான செட்டுக்கள் போடப்பட்டுள்ளன. இந்திய சினிமாவில் இது வரை கண்டிராத மிகப் பெரிய அரங்குகள் போடப்படும் என்கிறார்கள் திரைப்படக் குழுவினர்.

1980-ல் இக்கதை நடப்பதாக சிற்சில மாற்றங்களை செய்துள்ளனர். இத்திரைப்படத்தை வைஜெயந்தி மூவில் மற்றும் ஸ்வப்னா சினிமாஸ் இணைந்து தயாரிக்கின்றனர். மிக்கி ஜெ.மேயர் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.