யுபிஐ கட்டணம்! 40 காசு செலுத்தினால் செத்துவிட மாட்டீர்கள் - நீதி ஆயோக் துணைத் தலைவர்செய்யறிவு பயன்படுத்தி சிக்கிய மாணவர் தற்கொலை! ஐஐடி-மும்பை வளாகத்தில் போராட்டம்புரட்டாசி முதல் சனிக்கிழமை! காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் குவிந்த பக்தர்கள்!!ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடக்கம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு7 பேருந்து பணிமனைகளில் சாா்ஜிங் வசதிக்கு ரூ.300 கோடி: தில்லி அரசு ஒப்புதல்ஆந்திரத்தில் ரூ.15,000 கோடியில் புதிய கப்பல் கட்டும் தளம்: எம்டிஎல் நிறுவனம் ஒப்பந்தம்திருப்பதி - சென்னை கடற்கரைக்கு செப். 20-இல் முன்பதிவில்லாத ரயில்

திரையரங்கில் செல்போனில் வீடியோ எடுப்பதை சிம்பு ஊக்கப்படுத்துகிறாரா?

திரையரங்கில் வீடியோ எடுக்கக்கூடாது என்று ஒவ்வொரு திரையரங்கிலும் அறிவிப்புப்பலகை வைத்திருக்கிறார்கள்...

Published On :

திரையரங்கில் வீடியோ எடுக்கக்கூடாது என்று ஒவ்வொரு திரையரங்கிலும் அறிவிப்புப்பலகை வைத்திருக்கிறார்கள். விஷால் போன்ற நடிகர்களும் திரையரங்கில் ஓடும் படத்தை வீடியோவாகப் பதிவு செய்வதைக் கடுமையாக எதிர்க்கிறார்கள். இதுகுறித்த புகார்களைத் தீவிரமாகக் கையாள்கிறார்கள்.

ஆனால் இதே நடிகர்கள் தங்களுக்குச் சாதகமாக இருக்கும் என்றால் இதை ஊக்கப்படுத்தவும் செய்கிறார்கள்.

சமீபத்தில் வெளியான சிம்பு படம் - அன்பானவன், அசராதவன், அடங்காதவன். இந்தப் படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளில் ரசிகர்கள் சிலர் வீடியோ எடுத்து அதை ட்விட்டரிலும் வெளியிட்டு அஅஅ படக்குழுவினருக்கும் டேக் செய்து வருகிறார்கள்.

சிம்பு திரையில் தோன்றும்போதும் குறிப்பிட்ட காட்சிகளின்போதும் எந்தளவுக்குத் திரையரங்கில் வரவேற்பு பெறுகிறார் என்பதை வெளிப்படுத்த திரையரங்கில் ஓடும் படத்தை செல்போனில் பதிவு செய்துள்ளார்கள் ரசிகர்கள். அதை ட்விட்டரிலும் வெளியிட்டுவிடுகிறார்கள். நியாயமாக திரையுலகினர் இதுபோன்ற வீடியோக்களை அறவே புறக்கணிக்கவேண்டும். ஆனால் சிம்பு, யுவன் சங்கர் ராஜா போன்ற அஅஅ படக்குழுவினர் இதுபோன்ற வீடியோக்களை ரீட்வீட் செய்து உற்சாகப்படுத்துகிறார்கள்!

இதே உற்சாகத்தில் நாளை முழுப்படத்தையும் வீடியோவாக எடுத்தால் அதைக் கண்டிக்கும் உரிமை திரையுலகுக்கு இருக்குமா? இந்நிலையில் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய தவறை படக்குழுவினர் ஊக்கப்படுத்தாமல் இருக்கவேண்டும். இதுகுறித்து நடிகர் சங்கமும் தயாரிப்பாளர் சங்கமும் திரையுலகினருக்குத் தகுந்த அறிவுரைகளை வழங்கவேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.