

ஜப்பானிய திரைப்படங்கள் நமக்கு அறிமுகமான அளவு தமிழ் சினிமாவை ஜப்பானிய மக்கள் அறிந்திருக்கவில்லை. மிக சில இந்திப் படங்கள் ஜப்பானில் வெளியாகி உள்ளன. ஆனால் அவை ஜப்பானியர்களைக் கவரவில்லை.
முதன் முதலாக அவர்கள் பெரிதும் ரசித்தது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படங்களைத் தான். முத்து திரைப்படம் ஜப்பானில் வெளியிடப்பட்டு அங்கு பெரிய வெற்றியை அடைந்தது. அதன் பின் தொடர்ச்சியாக ரஜினி படங்களை ஜப்பானியர்கள் விரும்பிப் பார்க்கத் தொடங்கினர். இன்றளவும் ரஜினியின் நடிப்பை ஜப்பானிய மக்கள் மிகவும் ரசித்து வருகின்றனர்.
இயக்குனர் மணி ரத்னத்தின் படங்கள் அனைத்தும் ஜப்பானில் திரைப்பட விழாக்களில் இடம்பெற்று நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. மற்ற இந்திய இயக்குனர்களை விட மணி ரத்னத்துக்கு ஜப்பானில் ரசிகர்கள் அதிகம்.
இன்று தொடர்ச்சியாக சில தமிழ் படங்கள் ஜப்பானில் சப் டைட்டில் செய்யப்பட்டு வெளியாகின்றன. ஜப்பானியர்கள் தமிழ் படங்களை விரும்பக் காரணம் தமிழ் படத்தில் இடம் பெறும் பாடல் காட்சிகளும், சிறப்பான கதாநாயகர்களும், அழகான கதாநாயகிகளும்தான்.

ரஜினியைத் தொடர்ந்து ஜப்பானியர்கள் பெரிதும் ரசிக்கும் ஒரு மாஸ் ஹீரோ விஜய் தான். ஜப்பானில் மெர்சல் 20-ம் தேதி ரிலீஸ் ஆகிறது என்ற தகவல் வெளி வந்துள்ளது. ஜப்பானில் வெள்ளிக்கிழமை வெளியாகும் முதல் தமிழ் படம் மெர்சல் தானாம். மெர்சல் வெளியீடு உரிமையை Spacebox Japan எனும் நிறுவனம் பெற்றுள்ளது. ஜப்பானை பொறுத்தவரை எல்லா தமிழ் படங்கள் யொகோயமா மற்றும் டோகியாவில் தான் வெளியிடுவார்கள். ஆனால் தற்போது ஒசாகா, குன்மா ஆகிய இடங்களில் முதன் முறையாக திரையிடுகிறார்களாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
சினிமாவிலிருந்து விலகுகிறாரா, த்ரிஷா?

தங்கம் விலை மீண்டும் உயர்வு! எவ்வளவு?
மலையாளக் கரையோரம் யோகிபாபு!
வீடியோக்கள்

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

Youth movie review | Ken Karunas | Suraj | GV Prakash | Anishma Anilkumar
தினமணி வீடியோ செய்தி...

தினமணி ஈகைப் பெருநாள் மலர் அறிமுக விழா
தினமணி வீடியோ செய்தி...

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த சீமான்!
தினமணி வீடியோ செய்தி...

